
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது இன்னும் சில தினங்களில் துவங்க இருக்கிறது. இந்த தொடருக்கான டி20 அணிக்கு புதிய கேப்டனாக சூரியகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே டி20 வடிவ கிரிக்கெட்டில் இருந்து ரோகித் சர்மா ஓய்வை அறிவித்து விட்டதால் அவருக்கு அடுத்ததாக கேப்டனாக இருக்கப்போகும் வீரர்? குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் அதிகரித்தது.
அவ்வேளையில் இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியாவே அடுத்த டி20 கேப்டனாக இருப்பார் என்று பலரது மத்தியிலும் பேசப்பட்ட வேளையில் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் மற்றும் பயிற்சியாளர் கம்பீர் ஆகியோர் வீரர்களுடன் கலந்து ஆலோசித்து சூரியகுமார் யாதவை கேப்டனாக நியமித்துள்ளனர்.
மேலும் இந்த கேப்டன்சி நியமத்திற்கு முன்னதாகவே இந்திய வீரர்களிடம் கலந்து ஆலோசித்து பிறகே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கேப்டன்சி தனக்கு கிடைக்காததால் ஹார்டிக் பாண்டியா சூரியகுமார் யாதவுடன் எப்படி உடன் படுவாரோ என்ற குழப்பமும் இருந்தது.
இந்நிலையில் பலரும் எதிர்பார்த்த வகையில் அதற்கு முற்றிலும் மாறாக சூரியகுமார் யாதவை நேரில் கண்ட ஹார்டிக் பாண்டியா அவரது கேப்டன்சி பதவிக்கு வாழ்த்து கூறி கட்டியணைத்து தனது வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார்.
ஏற்கனவே மும்பை அணியின் கேப்டனாக ஹார்டிக் பாண்டியா நியமிக்கப்பட்ட போது சூரியகுமார் யாதவிற்கும், பும்ராவிற்கும் அந்த நியமனம் பிடிக்காததால் நேரடியாகவே தங்களது அதிருப்தியினை சமூகவலைத்தளம் மூலம் வெளிப்படுத்தி இருந்தனர்.
இதையும் படிங்க : இவரை பாத்து புதிய துணை கேப்டன் சுப்மன் கில் கத்துக்கனும்.. மந்தனாவின் பேட்டியை பார்த்து ரசிகர்கள் கருத்து
இந்நிலையில் தற்போது இந்திய அணிக்கும் அவர் (பாண்டியா) கேப்டனாக நியமிக்கப்படும் பட்சத்தில் அணியில் உள்ள வீரர்களுக்கு அந்த முடிவு அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கலாம் என்பதாலும் புதிய கேப்டனாக சூரியகுமார் யாதவை நியமித்திருக்கலாம் என்றும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.