தோனிக்கு அடுத்து இந்தியாவின் அடுத்த பினிஷர் தயாராயிட்டாரு – முன்னாள் ஆஸி வீரர் கணிப்பு

Dhoni

இந்திய அணியின் பினிஷர் என்று நாம் கேட்டவுடன் அனைவருக்கும் ஞாபகத்திற்கு சட்டென்று வருபவர் முன்னாள் கேப்டன் மஹேந்திர சிங் தோனி தான். இந்திய அணிக்காக பல ஆண்டுகள் சிறந்த பினிஷராக இருந்த தோனி ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். ஏற்கனவே இவரது இடத்திற்கான தேடல் பல காலமாக நடந்து வருகிறது. ஆனாலும் அவரது இடத்தினை நிரப்ப ஆளில்லை.

Dhoni

இந்நிலையில் இந்திய அணியின் அடுத்த பினிஷர் யார் என்ற கேள்வி தற்போது மெல்ல மெல்ல ரசிகர்களின் மத்தியில் எழத்துவங்கியுள்ளது. இது குறித்து பேட்டி அளித்துள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் டாம் மூடி தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு இந்திய அணியின் அடுத்த பினிஷர் குறித்த தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

இந்திய அணிக்கு அடுத்த பெஸ்ட் பினிஷர் ஆக ஹார்டிக் பாண்டியா இருப்பார். அவரைப் போன்ற ஒரு பினிஷர் கிடைப்பது அரிதிலும் அரிது. ஏனெனில் அவர் களமிறங்கும் பெரும்பாலான போட்டிகளில் அவர் 175 ஸ்ட்ரைக் ரேட்டுடன் ரன்களை குவித்து வருகிறார்.

Hardik

மற்ற அனைத்து சர்வதேச அணிகளுக்கு எதிராக அவரால் நெருக்கடி அளிக்க கூடிய முறையில் சிறப்பான பேட்டிங்கை செய்ய முடியும். இந்த ஐபிஎல் தொடரில் பிளேஆப் சுற்றில் நடைபெற்ற ஆட்டத்தில் கூட 14 பந்துகளில் 37 ரன்கள் குவித்து பிரமிக்க வைத்தார் என கூறியுள்ளார்.

- Advertisement -

pandya 1

இந்திய அணியின் முன்னாள் வீரர் கம்பீர் கூட ஹர்டிக் பண்டியாவை புகழ்ந்து பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.பிளே ஆப் சுற்றில் அவரது ஆட்டம் சிறப்பான வகையில் நம்ப முடியாததாக இருந்தது. மும்பை அணி 170 ரன்களை தாண்டுவதே கடினம் என்ற நிலையில் 200 ரன்களை எட்ட அவரே உதவினார் என்றும் கம்பீர அவரை புகழ்ந்து பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement