மும்பை இந்தியன்ஸ் க்ளவுஸ் உடன் ஆஸ்திரேலிய அணிக்கெதிராக பேட்டிங் செய்த இந்திய வீரர் – வைரலாகும் புகைப்படம்

Pandya-3
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது ஒருநாள் போட்டி நேற்று சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பின்ச் பேட்டிங் செய்வதாக தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 374 ரன்களை குவித்தது.

INDvsAUS Toss

- Advertisement -

அதிகபட்சமாக துவக்க வீரர் பின்ச் 114 ரன்களையும், ஸ்மித் 105 ரன்களும், டேவிட் வார்னர் 69 ரன்களை குவித்தனர், இதன் பின்னர் 375 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 308 ரன்கள் மட்டும் குவித்தது. இதன்மூலம் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது.

இந்திய அணி சார்பாக ஹர்திக் பாண்டியா சிறப்பாக விளையாடி 76 பந்துகளில் 90 ரன்களையும், ஷிகர் தவான் 74 ரன்களும் குவித்தனர். மற்ற யாரும் 30 ரன்களை கூட தொடவில்லை. ஆஸ்திரேலிய அணி சார்பாக ஜாம்பா சிறப்பாக பந்துவீசி 10 ஓவர்களில் 54 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்த போட்டியில் கிடைத்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா அணி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

pandya

இந்த போட்டியில் இந்திய அணியின் அதிரடி வீரரான ஹார்டிக் பாண்டியா 76 பந்துகளை சந்தித்து 4 சிக்சர்கள் மற்றும் 7 பவுண்டரிகளுடன் 90 ரன்களை குவித்தார். துவக்கத்தில் விளையாட ஆரம்பித்த போது பாண்டியா வெள்ளை நிற கிளவுசை பயன்படுத்திய விளையாடினார். அதன் பின்னர் ஒரு கட்டத்தில் கிளவுஸை மாற்றிய பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியின் கிளவுசை பயன்படுத்தி விளையாடி தனது அதிரடியை வெளிப்படுத்தினார்.

pandya 2

இதனை கண்ட நெட்டிசன்கள் அந்த புகைப்படத்தை ஆதாரமாக வைத்து இந்த செய்தியை வைரலாக்கி வருகின்றனர். மேலும் இந்த போட்டியில் பாண்டியா ஆல்-ரவுண்டராக விளையாடாமல் ஒரு முழுநேர பேட்ஸ்மேனாக விளையாடியது குறிப்பிடத்தக்கது.

Advertisement