இன்று கோடிகளில் புரளும் ஹார்டிக் பாண்டியாவின் ஆரம்ப காலகட்டம் பற்றி தெரியுமா ? – விவரம் இதோ

Pandya

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹார்டிக் பாண்டியா கடந்த 2016 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி இன்றுவரை இந்திய அணியில் சிறப்பாக விளையாடி வருகிறார். கடந்த 2019 உலகக்கோப்பை தொடரில் கூட அவர் இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார்.

இந்நிலையில் அவரது ஆரம்ப கால வாழ்க்கை குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவினை இட்டுள்ளார். அதில் மிகவும் சிறியவனாக இருக்கும் பாண்டியா ஒரு டிரக்கில் தனது நண்பர்களுடன் பயணிக்கும் புகைப்படத்தை பதிவிட்டு அந்த நாட்களில் நான் ஒன்று ட்ரக்கில் பயணித்து உள்ளூர் போட்டிகளில் விளையாட செல்வேன் இந்த விளையாட்டு எனக்கு மிகப்பெரிய பயணத்தை கற்றுக்கொடுத்தது. கிரிக்கெட்டை நான் மிகவும் நேசிக்கிறேன் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

பாண்டியாவின் இந்த பதிவை கண்ட ரசிகர்கள் அவரது தற்போதைய புகைப்படத்தை பகிர்ந்து ஆரம்பகாலத்தில் ட்ரக்கில் சென்ற பாண்டியா இன்று கோடிகளில் புரளுகிறார் என்று அவருடைய ஹைடெக் வாழ்வையும் புகைப்படமாக பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.