ஓய்வு நேரத்தில் கூட சும்மா இருக்க மாட்டிங்களா ? என்ன பாண்டியா இப்படி பண்றீங்க ?

Pandya
- Advertisement -

இந்திய அணியின் இளம் ஆல்ரவுண்டர் ஆன ஹர்டிக் பாண்டியா இந்திய அணியின் மூன்று வகை கிரிக்கெட்டிலும் பங்குபெற்ற விளையாடி வருகிறார். தற்போது நடைபெற்று வரும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக தொடரில் ஓய்வில் இருக்கும் பாண்டியா ஜிம்மில் கடுமையாக உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அதிரடி ஆட்டம் இன்றி உடலில் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதிலும் ரசிகர்களை கவர்ந்தவர் பாண்டியா. இந்திய அணியின் வீரரான விராட் கோலிக்கு சவால்விடும் வகையில் அவரது உடற்கட்டு அமைந்துள்ளது. வேகமாக ஓடுவது, தூரமாக சிக்ஸர் அடிப்பது, சிக்ஸ்பேக் என உடல் தகுதியில் அசத்துகிறார்.

- Advertisement -

இந்த உடல் தகுதியை அவர் எளிமையாக பெறவில்லை. அதற்காக கடுமையாக பயிற்சி செய்து வருகிறார். ஓய்வில் இருக்கும் இப்போது கூட அவர் ஜிம்மில் பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் அவர் காலுக்கு சிரமப்பட்டு பயிற்சி எடுக்கிறார். மேலும் ஒரு கட்டத்தில் பெண் பயிற்சியாளர் கூறுவதையும் மீறி அவர் அந்த பயிற்சியை பாதியில் முடிக்கும்வரை அந்த வீடியோ உள்ளது.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது இந்திய அணியின் வீரர்கள் ஃபிட்னஸ் தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருவது அணியின் வளத்தை பெருக்கும் என நம்பலாம் முன்னாள் கேப்டன் தோனியுடன் ஹர்டிக் பாண்டியா ஓட்டப்பந்தயத்தில் ஈடுபட்டபோது தோனியிடம் தோற்றது அப்போது வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது

Advertisement