GT vs SRH : 2 ஆவது முறையா நாங்க பிளே ஆப்புக்கு செல்ல இவங்களே காரணம் – ஹார்டிக் பாண்டியா மகிழ்ச்சி

Hardik Pandya
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 62-வது லீக் போட்டியானது நேற்று அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ஹார்டிக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், எய்டன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. அதன்படி இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற சன் ரைசர்ஸ் அணியானது முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

GT vs SRH

- Advertisement -

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய குஜராத் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் குவித்தது. குஜராத் அணி சார்பாக அந்த அணியின் துவக்க வீரரான சுப்மன் கில் 101 ரன்கள் அடித்து அசத்தினார். பின்னர் 189 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சன் ரைசர்ஸ் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் மட்டுமே குவித்தது.

இதன்காரணமாக சன் ரைசர்ஸ் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய குஜராத் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா கூறுகையில் : எங்கள் அணியின் வீரர்களை நினைத்தால் மிகவும் பெருமையாக இருக்கிறது. இந்த இரண்டு புள்ளிகளின் மூலம் நாங்கள் பிளே ஆப் சுற்றிற்கு நுழைந்துள்ளோம்.

Mohit Sharma

அடுத்தடுத்து இரண்டு தொடரிலும் நாங்கள் தொடர்ச்சியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களுடைய அணியின் வீரர்கள் எந்த சவாலான சூழ்நிலையாக இருந்தாலும் தங்களது பங்களிப்பினை சரியாக வழங்கி இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளனர். ஒரு அணியாக நாங்கள் மிகச் சிறப்பான ஆட்டத்தை இந்த தொடரிலும் வெளிப்படுத்தியதாக நினைக்கிறேன்.

- Advertisement -

ஒரு சில போட்டிகளில் நாங்கள் தவறுகளை செய்திருந்தாலும் அடுத்தடுத்த போட்டிகளில் மிகச் சிறப்பாக திரும்புவது எங்கள் அணியில் உள்ள வலிமையை காட்டுகிறது. இந்த தொடரில் எங்களது பந்துவீச்சாளர்களை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். பேட்ஸ்மேன்களை விட பந்துவீச்சாளர்கள் தான் இந்த தொடரில் நாங்கள் இந்த நிலைக்கு தகுதி பெற காரணம் என்று நினைக்கிறேன்.

இதையும் படிங்க : IPL 2023 : தோனி மாதிரி நீங்களும் தொடர்ந்து விளையாடுங்க, உதவி வேணும்னா போன் பண்ணுங்க – சீனியர் வீரருக்கு சேவாக் கோரிக்கை

ஏனெனில் நான் எப்பொழுதுமே ஒரு பந்துவீச்சாளர்களின் கேப்டனாகவே செயல்பட்டு வருகிறேன். அந்த வகையில் இந்த வெற்றியும் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என ஹார்டிக் பாண்டியா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement