IND vs NZ : நியூசி அணிக்கு எதிரான இந்த பிரமாதமான வெற்றிக்கு காரணமே இவங்கதான் – கேப்டன் பாண்டியா பேசியது என்ன?

Hardik-Pandya
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது தற்போது நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது டி20 போட்டியானது மழையால் கைவிடப்பட்ட நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது இன்று மவுன்ட் மாங்கனி மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்கிற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

INDvsNZ

- Advertisement -

அதன்படி இன்றைய போட்டியில் முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தீர்மானம் செய்யவே முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக சூரியகுமார் யாதவ் அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 111 ரன்கள் குவித்தார். அதனை தொடர்ந்து 192 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணியானது :

18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 126 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ஹார்டிக் பாண்டியா கூறுகையில் : இதைவிட ஒரு சிறப்பான வெற்றி கிடைக்காது. அனைத்து வீரர்களின் பங்களிப்புமே இந்த வெற்றியில் இருந்தது.

Suryakumar Yadav

அதோடு சூரியகுமார் யாதவுக்கு இது ஒரு ஸ்பெஷலான இன்னிங்ஸ்ஸாக இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். ஒரு கட்டத்தில் நாங்கள் 170 முதல் 175 ரன்கள் வரை மட்டுமே குவிப்போம் என்று எதிர்பார்த்த வேளையில் சூரியகுமார் யாதவின் அதிரடி காரணமாக அணியின் எண்ணிக்கை 190 ரன்களை தாண்டியது. இந்த போட்டியில் பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக பந்து வீசினார்கள் என்று நினைக்கிறேன்.

- Advertisement -

அதே போன்று இதே மாதிரியான ஆக்ரோஷமான பந்துவீச்சை அவர்கள் தொடர்ச்சியாக வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறேன். பந்துவீச்சில் ஆக்ரோஷமாக செயல்பட வேண்டியது எப்போதுமே அவசியமான ஒன்று. இந்த கண்டிசனில் இந்திய பவுலர்கள் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளனர். அதேபோன்று பேட்டர்களும் மிகச் சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தி உள்ளனர்.

இதையும் படிங்க : வீடியோ : சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு பரிதாப சாதனையை பார்சல் செய்த – ஷ்ரேயாஸ் ஐயர்

இப்படி அனைவரது உழைப்பிற்கும் கிடைத்த வெற்றியாக இதை நான் பார்ப்பதாக ஹர்திக் பாண்டியா கூறியது குறிப்பிடத்தக்கது. மேலும் தொடர்ந்து பேசிய அவர் : இந்திய அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களும் மற்ற வீரர்களின் சக்ஸஸ்-சை நினைத்து தாங்களும் மகிழ்ச்சி அடைகின்றனர் அதை பார்ப்பதற்கே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றும் பாண்டியா தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement