2018 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஆசிய கோப்பை போட்டியில் மோதிக்கொண்டிருந்தது. அப்போது 35வது ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். பாபர் அசாம் பேட்டிங் பிடித்துக் கொண்டிருந்தார். அந்த ஓவரின் 5-வது பந்தை வீசும்போது ஹர்திக் பாண்டியா மைதானத்திலேயே நிலைகுலைந்து கீழே விழுந்துவிட்டார். அவருக்கு காலில் சுளுக்கு ஏற்பட்டது போல் தோன்றியது.
ஆனால் சக வீரர்கள் வந்து எழுப்பியபோது அவரால் எழுந்திருக்க முடியவில்லை. பின்னர் வேறு வழியின்றி ஸ்ட்ரெச்சரில் மைதானத்திற்கு வெளியே தூக்கிச் செல்லப்பட்டார் .அதன் பின்னர் தான் தெரிந்தது அவருக்கு முதுகில் பலமான காயம் ஏற்பட்டுள்ளது என்று. அதுவரை எந்த ஒரு வீரரும் பந்துவீசும் போது நிலைகுலைந்து விழுந்து, ஸ்ட்ரெச்சரில் மைதானத்திற்கு வெளியே தூக்கி சொல்லப்பட்டதில்லை.
இந்நிலையில் அந்த ஒரு தருணத்தில் தனது கிரிக்கெட் வாழ்க்கையை முடிந்து போய் விட்டதாக நினைத்துள்ளார் ஹர்திக் பாண்டியா. இதுகுறித்து தற்போது அவர் பேசியுள்ளார். அந்த நிகழ்வு குறித்து அவர் கூறுகையில்…
எனக்கு அப்போது என்ன நடந்தது என்றே தெரியவில்லை . திடீரென்று நிலைகுலைந்து விழுந்துவிட்டேன். பத்து நிமிடம் என்னால் எழுந்திருக்கவே முடியவில்லை. எனக்கு வலி அதிகமாகிக்கொண்டே இருந்தது . அவ்வளவுதான் என் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து போய்விட்டது என்று நினைத்தேன்.
ஏனெனில் எந்த ஒரு பந்து வீச்சாளரும் இப்படி ஸ்ட்ரெச்சரில் மைதானத்திற்கு வெளியே தூக்கி செல்லப்பட்டதில்லை. கிட்டதட்ட அரை மணி நேரம் கழித்து தான் என்ன நடந்தது என்று எனக்கு தெரிந்தது என்று கூறியுள்ளார் ஹர்திக் பாண்டியா
ஆனால் அதன் பின்னர் லண்டன் சென்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டு தற்போது மீண்டும் கடினமான பயிற்சிக்கு பின்னர் களத்திற்கு வந்துள்ளார் ஹர்திக் பாண்டியா. மேலும் , அந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா விட்டு வைத்த 6வது பந்தை அம்பத்தி ராயுடு வீச, ஹர்திக் பாண்டியா அதற்கு பதில் மணிஷ் பாண்டே களமிறங்கினார். இந்திய அணி அந்த போட்டியில் வெற்றியும் பெற்றது குறிப்பிடத்தக்கது.