கடைசி 11 போட்டியில் ஒருமுறை கூட 40 ரன்கள் அடிக்கல. பார்ம் அவுட்டில் இருக்கும் முன்னணி வீரர் – பாதிப்பு நமக்குத்தான்

IND
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் டி20 உலக கோப்பை தொடரானது நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் வெற்றி பெற்று டி20 உலக கோப்பையை கைப்பற்ற அனைத்து அணிகளும் தற்போது மும்முரமாக தயாராகி வருகின்றன. அதேவேளையில் இந்திய அணியும் கடந்த சில ஆண்டுகளாகவே பல ஐ சி சி கோப்பைகளை தவறவிட்டு வரும் இவ்வேளையில் நிச்சயம் இந்த டி20 கோப்பையை கைப்பற்றி ஆகவேண்டிய கட்டாயத்தில் அதனை குறி வைத்துள்ளது.

cup

இந்நிலையில் இந்திய அணியின் முன்னணி வீரர் ஒருவரின் ஆட்டம் படு மோசமாக உள்ளதால் தற்போது இந்த விடயம் இந்திய அணிக்கு சற்று கவலை தரும் விடயமாக மாறியுள்ளது. இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாலும் முன்னணி ஆல்ரவுண்டர் ஹார்டிக் பாண்டியா வின் பேட்டிங் திருப்திகரமாக இல்லை.

- Advertisement -

ஏற்கனவே ஒருநாள் தொடரின் போது ரன்கள் குவிக்க சிரமப்பட்ட ஹார்டிக் பண்டியா தற்போது டி20 போட்டிகளிலும் ரன்கள் குவிக்க மிகவும் தடுமாறுகிறார். கடைசியாக அவர் பங்கேற்ற 11 சர்வதேச டி20 போட்டிகளில் ஒரு போட்டியில் கூட 40 ரன்களை குவிக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பின்வரிசையில் இறங்குவதால் அவரால் கடைசியாக 11 போட்டிகளில் அதிக ரன்களை அடிக்கமுடியவில்லை.

Pandya-4

பழைய பாண்டியா போன்று அதிரடியான ஆட்டத்தை அவரால் வெளிப்படுத்த முடியவில்லை. இதனால் இந்திய அணிக்கு சற்று சிக்கல் என்றே கூறலாம். ஏனெனில் பந்துவீச்சில் மட்டுமின்றி பேட்டிங்கில் தனது அதிரடி மூலம் பினிஷிங் செய்யும் பாண்டியா தற்போது சமீபகாலமாகவே பேட்டிங்கில் தடுமாறி வருவது எதிர்வரும் உலகக் கோப்பையில் அவரது இடத்திற்கு கேள்விக்குறியாக அமைந்துள்ளது.

pandya 2

மேலும் இழந்த தனது பார்மை அடுத்து வரும் இரண்டு போட்டிகளில் மீட்டு எடுத்தால் மட்டுமே அவரால் டி20 உலக கோப்பையில் சிறப்பாக விளையாட முடியும். அது மட்டுமின்றி ஐபிஎல் தொடரும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுவதால் நிச்சயமாக ஐபிஎல் போட்டிகளிலும் தனது பேட்டிங்கை நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்தில் ஹார்டிக் பாண்டியா உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement