- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ரசிகர்கள் நம்பாதப்போ கம்பேக் கொடுக்க போராடுனேன்.. கடவுள் வேற கணக்கு போட்டாரு.. பாண்டியா பேட்டி

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய இரண்டாவது சூப்பர் 8 போட்டியில் வங்கதேசத்தை 50 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. ஜூன் 22ஆம் தேதி ஆன்ட்டிகுவா நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய கிரிக்கெட் அணி 197 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 50, சிவம் துபே 34, விராட் கோலி 37, ரிஷப் பண்ட் 36 ரன்கள் எடுத்தனர்.

அதைத் தொடர்ந்து சேசிங் செய்த வங்கதேசம் எதிர்பார்த்தது போலவே இந்தியாவின் தரமான பந்து வீச்சில் சுமாராக விளையாடிய 20 ஓவரில் 146/8 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் சாந்தோ 40 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.

- Advertisement -

கம்பேக் போராட்டம்:
அதனால் செமி ஃபைனலுக்கு செல்லும் வாய்ப்பை இந்தியா 99% சதவீதம் உறுதி செய்துள்ளது. இந்த வெற்றிக்கு 50 ரன்கள் மற்றும் 1 விக்கெட் எடுத்து ஆல்ரவுண்டராக முக்கிய பங்காற்றிய ஹர்திக் பாண்டியா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் 2023 உலகக் கோப்பையில் காயமடைந்த தாம் மீண்டும் ஃபைனலுக்கு முன் கம்பேக் கொடுக்க முயற்சித்ததாக ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

இருப்பினும் தம்மை ரசிகர்கள் நம்பாத அந்த சூழ்நிலையில் கடவுள் வேறு திட்டம் போட்டதாக தெரிவிக்கும் அவர் அதையெல்லாம் தாண்டி இந்தியாவுக்கு விளையாடும் அதிர்ஷ்டமான வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் பெருமை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடினோம். அனைத்தையும் விட நாங்கள் ஒன்றாக இருந்து எங்களுடைய திட்டங்களை செயல்படுத்தினோம்”

- Advertisement -

“இங்கே பேட்ஸ்மேன்கள் காற்றை பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறார்கள் என்பதை நான் உணர்ந்தேன். அதனால் காற்றடிக்கும் போது பேட்ஸ்மேன்களுக்கு வாய்ப்பு கொடுக்கக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன். அந்த வகையில் நான் பேட்ஸ்மேன்களுக்கு ஒரு படி முன்னதாக இருந்தேன். பேட்டிங்கில் நாங்கள் அவ்வப்போது விக்கெட்டுகளை இழந்தோம். அதை நாங்கள் சரி செய்ய வேண்டியுள்ளது”

இதையும் படிங்க: 50 ரன்ஸ்.. வங்கதேசத்தை தோற்கடித்த இந்தியா.. 13 சிக்ஸருடன் 17 வருட அசத்தல் சாதனை.. செமி ஃபைனல் உறுதியானதா?

“மற்றபடி நாங்கள் நன்றாக விளையாடினோம். நாட்டுக்காக விளையாடுவதற்கு நான் அதிர்ஷ்டம் செய்திருக்கிறேன். கடந்த முறை வேடிக்கையான காயமடைந்த போது கம்பேக் கொடுக்க முயற்சித்தேன். ஆனால் கடவுள் வேறு திட்டம் வைத்திருந்தார். மற்றொரு நாள் நான் ராகுல் டிராவிட் சாரிடம் பேசினேன். அப்போது கடினமாக உழைப்பவர்களுக்கு அதிர்ஷ்டம் வரும் என்று அவர் சொன்னார். அந்த வார்த்தைகள் என்னுடன் நீண்ட காலமாக ஒட்டிக் கொண்டுள்ளது” என்று கூறினார்.

- Advertisement -