- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்தியர்கள் ஆளப்பிறந்தவங்க.. இப்போவாச்சும் புரிஞ்சிக்கோங்க.. இதான் எனக்கு பெருமை.. ஹர்டிக் பாண்டியா பேட்டி

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் 2024 டி20 உலகக் கோப்பையில் இந்தியா தங்களுடைய முதல் போட்டியில் அயர்லாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஜூன் ஐந்தாம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து 96 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக டிலானி 26 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.

அதைத் தொடர்ந்து 97 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக 52*, ரிஷப் பண்ட் 36* ரன்கள் எடுத்து 12.2 ஓவரிலேயே எளிதாக வெற்றி பெற வைத்தனர். அதனால் குரூப் ஏ பிரிவில் 2 புள்ளிகளை பெற்ற இந்தியா முதலிடம் பிடித்து இந்த உலகக் கோப்பையை வெற்றியுடன் துவங்கியது. இந்த வெற்றிக்கு 3 ஓவரில் 6 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்த பும்ரா ஆட்டநாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

பாண்டியாவின் பெருமை:
அதே போல 4 ஓவரில் 1 மெய்டன் உட்பட 27 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்த ஹர்திக் பாண்டியாவும் வெற்றியில் முக்கிய பங்காற்றினார். சமீபத்திய ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் தோல்விக்கு காரணமாகும் வகையில் சுமாராக செயல்பட்ட அவர் ரசிகர்களால் கடுமையாக கிண்டலடித்து விமர்சிக்கப்பட்டார்.

குறிப்பாக பாண்டியா பணத்துக்காக விளையாடுவார் நாட்டுக்காக காயமடைந்து விடுவார் அல்லது சுமாராக செயல்படுவார் என்பதே கிரிக்கெட் ரசிகர்ககளின் விமர்சனமாகும். இந்நிலையில் அனைத்தையும் விட நாட்டுக்காக விளையாடுவதே தமக்கு எப்போதும் ஸ்பெஷலான பெருமை என்று ரசிகர்களுக்கு புரியும்படி ஹர்திக் பாண்டியா பேசியுள்ளார். இது பற்றி இப்போட்டியின் முடிவில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“நாட்டுக்காக விளையாடுவது மிகவும் ஸ்பெஷலானது. தேசத்தின் பெருமைக்காக விளையாடுவது எப்போதும் சிறந்தது. கடவுளின் ஆசிர்வாதத்தால் உலகக் கோப்பைகளில் என்னால் இந்திய அணியின் வெற்றிகளில் பங்காற்ற முடிகிறது. அக்சர் படேல் அற்புதமாக ஃபீல்டிங் செய்தார். அது போன்ற கேட்ச்களை உங்கள் கை மற்றும் கண்கள் ஒருங்கிணைந்து இருக்கும் போது மட்டுமே பிடிக்க முடியும்”

இதையும் படிங்க: உலககோப்பை முதல் போட்டியில் நாங்க பெற்ற வெற்றிக்கு காரணம் அவர்தான் – ரோஹித் சர்மா பாராட்டு

“என்னுடைய முதல் விக்கெட்டை மிகவும் விரும்பினேன். நான் அதிகமாக ஸ்டம்ப் லைனில் வீச மாட்டேன். ஷார்ட் ஆஃப் லென்த் பந்துகளை வீசுவேன். இன்று பேக் லென்த்தை விட ஃபுல்லர் லென்த் பந்துகளை வீச வேண்டிய நிலையில் இருந்தேன். இது போன்ற மைதானங்களில் நீங்கள் கட்டுக்கோப்புடன் சரியான இடங்களில் பந்து வீச வேண்டும். ரசிகர்களை அதிகமாக பார்ப்பது எப்போதும் நன்றாக இருக்கும். இந்தியர்களான நாங்கள் உலகத்தை ஆள்கிறோம். எனவே இந்தப் போட்டியில் அவரின் ஆதரவு எங்களுக்கு கிடைத்தது நல்லது” என்று கூறினார்.

- Advertisement -