- Advertisement -
இந்திய கிரிக்கெட்

223 சேசிங்கில் 77 ரன்ஸ்.. ஆல் ரவுண்டராக அசத்திய பாண்டியா.. இந்தியாவுக்காக கம்பேக் கொடுக்க தயார்

இந்தியாவில் சயீத் முஸ்டாக் அலி டி20 கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அத்தொடரில் டிசம்பர் 2ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற்ற எலைட் குரூப் சி பிரிவின் லீக் போட்டியில் பஞ்சாப் மற்றும் பரோடா அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப்புக்கு 53 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த பிரப்சிம்ரன் சிங் 16 (13) ரன்களில் அவுட்டானார். அவருடன் இணைந்து பட்டாசாக விளையாடிய கேப்டன் அபிஷேக் ஷர்மா 5 பவுண்டரி 4 சிக்சரை பறக்க விட்டு 50 (19) ரன்கள் குவித்து விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக ஜோடி சேர்ந்த அன்மோல்ப்ரீத் சிங் – நமன் திர் ஆகியோர் தங்களுடைய பங்கிற்கு அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.

- Advertisement -

பாண்டியா அசத்தல்:

அதில் அரை சதமடித்த அன்மோல்ப்ரீத் 69 (32) ரன்களும் நமன் திர் 39 (28) ரன்களும் குவித்து அவுட்டானார்கள். லோயர் ஆர்டரில் நேஹல் வதேரா 16 (12), சன்விர் சிங் 16 (11) ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவரில் பஞ்சாப் 222/8 ரன்களை குவித்தது. பரோடாவுக்கு அதிகபட்சமாக ராஜ் லிம்பானி 3 விக்கெட்டுகளை எடுத்தார்.

காயத்திலிருந்து குணமடைந்த விளையாடும் நம்பிக்கை நட்சத்திரம் ஹர்திக் பாண்டியா 4 ஓவரில் 52 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டை எடுத்தார். அடுத்ததாக 223 ரன்களை துரத்திய பரோடாவுக்கு 66 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த சஸ்வந்த் ராவத் 31 (18) ரன்கள் குவித்து அவுட்டானார். அவருடன் இணைந்து விளையாடிய விஷ்ணு சோலங்கி 5 பவுண்டரி 2 சிக்சருடன் 43 (21) ரன்கள் குவித்து விக்கெட்டை இழந்தார்.

- Advertisement -

இந்தியாவுக்காக கம்பேக் கொடுக்க தயார்:

அடுத்ததாக ஜோடி சேர்ந்த ஹர்திக் பாண்டியா – சிவாலிக் சர்மா ஆகியோர் பஞ்சாப் பவுலர்களைப் பந்தாடினார்கள். அதில் மிகவும் அதிரடியாக விளையாடிய ஹர்திக் பாண்டியா அரை சதமடித்து 7 பவுண்டரி 4 சிக்ஸருடன் 77* (42) ரன்கள் குவித்து அசத்தினர். அவருடன் சிவாலிக் சர்மா 47* (31) ரன்கள் குவித்ததால் 19.1 ஓவரில் 224/3 ரன்கள் எடுத்த பரோடா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதையும் படிங்க: தோனி மாதிரி விராட், ரோஹித்துக்கும் அந்த சலுகை கொடுங்க.. அசத்தலன்னா கழற்றி விடுங்க.. எம்எஸ்கே பிரசாத்

அந்த வகையில் கடந்த ஆசியக் கோப்பையில் காயமடைந்த பாண்டியா மீண்டும் குணமடைந்து இப்போட்டியில் 183.33 ஸ்ட்ரைக் ரேட்டில் 77* ரன்கள் மற்றும் 1 விக்கெட் எடுத்து பரோடாவின் வெற்றியில் பங்காற்றினார். அதனால் மீண்டும் இந்தியாவுக்காக விளையாடத் தயாராக இருக்கிறேன் என்பதை அவர் காண்பித்துள்ளார் என்றே சொல்லலாம். எனவே விரைவில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெறும் டி20 தொடரில் அவர் இந்தியாவுக்காக கம்பேக் கொடுக்கத் தயாராகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -