தனது மனைவியுடன் மகனின் புகைப்படத்தையும் பகிர்ந்த ஹார்டிக் பாண்டியா – குவியும் லைக்ஸ்கள்

Natasa-1

இந்திய அணியின் இளம் நட்சத்திர ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியா இந்திய அணிக்காக தனது தொடர்ச்சியான சிறப்பான ஆட்டத்தால் அணியில் நிரந்தர இடத்தைப் பெற்றது மட்டுமின்றி ரசிகர்களையும் கவர்ந்து வருகிறார். கடந்த சில மாதங்களாக காயத்தால் அவதிப்பட்டு வந்த பாண்டியா தற்போது மீண்டும் ஐபிஎல் தொடர்களில் களமிறங்கி பிரகாசிக்க இருக்கிறார்.

Natasa

இவருக்கும் செர்பிய நாட்டு நடிகையான நட்டாஷா வுக்கும் இடையே இருந்த காதலை மோதிரம் மாற்றி வெளிப்படுத்தி நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து நட்டாஷா கர்ப்பமாக இருப்பதாக இன்ஸ்டாகிராமில் ஹர்டிக் பண்டியா தெரிவித்திருந்தார். மேலும் எங்கள் உலகில் இன்னொருவர் இணைய போவதாகவும் கூறியிருந்தார்.

அதன்படி அவருக்கு சமீபத்தில் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அதனையும் பதிவிட்ட ஹார்திக் பாண்டியாவிற்கு கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் குழந்தை பிறந்து தற்போது சில நாட்களே ஆன நிலையில் தற்போது ஐபிஎல் தொடருக்காக துபாய் வந்துள்ள பாண்டியா தனது மனைவியும் குழந்தையும் மிகவும் மிஸ் செய்வதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

Missing my 2 angels 👼 Blessed to have you both in my life 🙏🏾❤️

A post shared by Hardik Pandya (@hardikpandya93) on

தனது மனைவியுடன் வீடியோ கால் பேசுவதை புகைப்படமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பக்கத்தில் பகிர்ந்துள்ள பாண்டியா இவர்கள் இருவரையும் வாழ்க்கையில் நான் பெற ஆசீர்வதிக்கப்பட்டு உள்ளேன். உங்கள் இருவரையும் மிஸ் செய்கிறேன் “மை ஏஞ்சல்ஸ்” என்று பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

ஹார்டிக் பாண்டியாவின் இந்த புகைப்படத்தில் அவரது குழந்தை அழகாக தூங்கிக் கொண்டிருப்பது போல இருக்கிறது. அதனை கண்ட ரசிகர்கள் பலரும் உங்களுடைய குழந்தை மிகவும் அழகாக இருப்பதாகவும், க்யூட்டாக இருப்பதாகும், மிக அமைதியாக உறங்குவதாகவும் பதிவிட்டு லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.