ஒரே ஒரு எம்.எஸ்.தோனிதான். ரொம்ப கஷ்டமா இருக்கு. என்னை வழிநடத்துங்கள் – உருக்கமான பதிவை வெளியிட்ட பாண்டியா

Hardik-Pandya
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னணி வீரராக திகழ்ந்த தோனி இந்திய கிரிக்கெட் அணிக்காக 2004 ஆம் ஆண்டு அறிமுகமாகி சுமார் 16 ஆண்டுகளாக விளையாடி 90 டெஸ்ட் போட்டிகளிலும், 350 ஒருநாள் போட்டிகளிலும், 98 டி20 போட்டிகளிலும் இந்திய அணிக்காக விளையாடி விளையாடி உள்ளார். இந்நிலையில் தற்போது கடந்த ஓராண்டாக இந்திய அணியில் இடம் கிடைக்காமல் இருந்த டோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று முன்தினம் அறிவித்திருந்தார்.

அவரது இந்த திடீர் ஓய்வு அறிவிப்பினால் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள், சக அணி வீரர்கள் என அனைவரும் வருத்தத்தில் ஆழ்ந்தனர். மேலும் தோனியின் இந்த முடிவுக்கு கிரிக்கெட் வீரர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், தீவிர ரசிகர்கள் என அனைவரும் தங்களது வாழ்த்துகளை கூறி பிரியாவிடை கொடுத்து வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் தற்போது இந்திய அணியின் இளம் ஆல்ரவுண்டரான ஹார்டிக் பண்டியா தோனிக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில் “ஒரே ஒரு எம்எஸ் தோனி மட்டும் தான்”. எனது வாழ்க்கையில் மிகப்பெரிய உத்வேகத்தை அளித்தமைக்கு எனது நண்பர் மற்றும் மூத்த சகோதரரான தோனிக்கு நன்றி.

இனி நீல நிற ஜெர்சியில் உங்களுடன் விளையாடுவதைப் பார்க்க முடியாது என்பதை நினைத்தால் வருத்தமாக உள்ளது. ஆனால் நீங்கள் எப்போதும் எனக்காக இருப்பீர்கள். என்னை வழி நடத்துவீர்கள் என்று பதிவிட்டுள்ளார்.

அவரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் எப்பொழுதுமே தோனிக்கு மிக நெருங்கிய நபராக இருக்கும் பாண்டியா அவ்வப்போது தோனியை சந்திப்பதும் அவருடன் இருப்பதும் என்றும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement