
ஹார்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியானது இந்தியாவில் நடைபெற்று முடிந்த 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 14 போட்டியில் விளையாடிய 10 தோல்விகளை சந்தித்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தினை பிடித்து வெளியேறியது. ஜாம்பவான் அணியாக பார்க்கப்பட்ட இந்த அணி ஹார்டிக் பாண்டியாவின் வருகைக்கு அடுத்து இந்த நிலையை சந்தித்துள்ளது அனைவரது மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த தோல்வி ஒருபுறம் இருக்க மற்றொருபுறம் இந்திய அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள பாண்டியாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் பல்வேறு வதந்திகள் சமூக வலைதளத்தில் பரவி வருகின்றன.
அதாவது பாண்டியாவும் அவரது மனைவி நட்டாஷாவும் விரைவில் விவாகரத்து பெற்று பிரிய இருப்பதாக கடந்த சில நாட்களாகவே பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஏனெனில் சமூக வலைதளத்தில் பாண்டியாவை பின்தொடர்வதை நிறுத்திய அவரது மனைவியின் நட்டாஷா அவருடன் இருக்கும் புகைப்படங்களையும் நீக்கி உள்ளார்.
அதோடு விரைவில் அவர் பாண்டியாவிடமிருந்து விவாகரத்து பெறுவார் என்றும் அப்படி விவாகரத்து பெறும்பட்சத்தில் பாண்டியாவிடம் இருந்து 70 சதவீத சொத்துக்களை பெற்றுக் கொண்டே விவாகரத்து பெறுவார் என்ற நிபந்தனையும் வைத்துள்ளதாக தகவல்கள் பரவின.
இப்படி ஒரு புறம் பாண்டியாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த வதந்திகள் பரவிவரும் வேளையில் ஐபிஎல் தொடரை முடித்த கையோடு வெளிநாட்டுக்கு ஓய்விற்கு சென்ற பாண்டியா அங்கிருந்து நேரடியாக அமெரிக்கா சென்று இந்திய அணியுடன் இணைந்துள்ளார். அதோடு தனது சமூக வலைதளபக்கம் மூலமாக அமெரிக்கா சென்றதுமே ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க : கிரிக்கெட்ல என்னோட லட்சியமே இதுமட்டும் தான்.. அதை சாதிப்பதே என்னோட ஆசை – ரிங்கு சிங் விருப்பம்
அதில் பாண்டியா தான் பயிற்சி எடுக்கும் நான்கு புகைப்படங்களை பகிர்ந்து தற்போது “தேசிய பணியில்” உள்ளேன் என்று இந்திய அணிக்காக விளையாட உள்ளதை மட்டுமே குறிப்பிட்டுள்ளார். அதை தவிர்த்து வேறு எதுவும் அவர் வெளியிடவில்லை. எனவே தற்போதைக்கு உலக கோப்பை முடியும் வரை அவர் இந்திய அணிக்காக மட்டுமே முழு கவனத்துடன் விளையாட உள்ளார் என்பது தெரியவந்துள்ளது.