இந்திய அணிக்கு இப்படிப்பட்ட இன்னொரு வீரரை நாம் கண்டுபிடிக்க வேண்டும் – ஹர்திக் பாண்டியா வெளிப்படை

Pandya-5
- Advertisement -

இந்திய அணியின் முக்கிய ஆல்-ரவுண்டராக இருப்பவர் ஹர்திக் பாண்டியா கடந்த 15 மாதங்களாக சர்வதேச கிரிக்கெட் விளையாடாமல் இருந்தார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இடம் பிடித்து அசத்தினார். இந்த போட்டியில் அவர் பந்து வீசவில்லை பேட்டிங் சிறப்பாக செய்து 90 ரன் அடித்தார். இருந்தாலும் அணியின் வெற்றிக்காக சுயநலமின்றி ஆடி, சதம் அடிக்காமல் அவுட் ஆகிவிட்டார்.

Dhawan-Pandya

- Advertisement -

கடந்த ஆண்டு முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்து கொண்ட பின்னர் தற்போது தான் விளையாடுகிறார். இந்த வருட ஐபிஎல் தொடரிலும் பேட்டிங் மற்றும் இப்படித்தான் ஒரு பந்து கூட பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டி முடிந்த பின்னர் ஹர்திக் பாண்டியா பல விஷயங்கள் பற்றி பேசினார் அவர் கூறுகையில்…. எனது பந்துவீச்சில் தொடர்ச்சியாக நான் கவனம் செலுத்தி வருகிறேன் அதற்கு சரியான நேரம் வரும்போது செயல்படுத்துவேன் .

100 சதவீத திறமையை எனது பந்துவீச்சில் காட்ட விரும்புகிறேன் சர்வதேச அளவிற்கு என்னை பந்துவீச தகுதியுள்ள ஒரு பந்து வீச்சாளராக வளர்த்துக் கொண்டிருக்கிறேன். இதற்கு நீண்ட கால திட்டம் தேவைப்படுகிறது. டி20 உலகக் கோப்பை மற்றும் மற்ற முக்கிய தொடருக்காக எனது பந்துவீச்சை தயார் செய்து கொண்டிருக்கிறேன்.

Pandya-3

இந்தியாவுக்காக விளையாடும் ஆல்ரவுண்டரை கண்டுபிடிக்க வேண்டும் அவர் பந்து வீச கூடிய ஆல்-ரவுண்டராக இருக்க வேண்டும். 5 பந்து வீச்சாளர்களுடன் விளையாடும் போது சற்று கடினமாக இருக்கிறது. யாராவது ஒருவருக்கு காயம் ஏற்பட்டாலும் அந்த இடத்தை நிரப்புவதற்கு ஏற்ற ஒரு வீரர் இருக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார் ஹர்திக் பாண்டியா.

Pandya6

மேலும் போட்டி முடிந்து பேசிய இந்திய அணியின் கேப்டன் கோலியும் 5 பந்துவீச்சாளர்களுடன் விளையாடுவது கடினம் எனவும் ஒரு நல்ல பந்துவீச கூடிய ஆல்ரவுண்டர் அணியில் இருப்பது அவசியம் என்றும் தனது கருத்தினை வெளிப்படையாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement