என்னுடைய இந்த குணத்தால் தான் இந்திய அணியில் நான் தேர்வாகவில்லை – ஹார்டிக் பாண்டியா ஓபன் டாக்

Pandya
- Advertisement -

இந்திய அணியில் இளம் ஆல்ரவுண்டர் ஹர்டிக் பண்டியா தற்போது இந்திய அணியின் ஒரு நம்பிக்கை நட்சத்திரம் ஆகவே மாறி இருக்கிறார் என்றால் அது முற்றிலும் உண்மையே. இந்திய அணிக்காக கடந்த 2016 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அறிமுகமான பாண்டியா இதுவரை 40 டி20 மற்றும் 54 ஒருநாள் போட்டிகள் மற்றும் 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Pandya 1

- Advertisement -

பாண்டியாவின் அதிரடி ஆட்டம் ஐபிஎல் தொடரின் மூலம் வெளியே வர அதனைத் தொடர்ந்து அவர் இந்திய அணியில் இடம் பெற்றார். வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஹார்திக் பாண்டியா தொடர்ந்து தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது மட்டுமின்றி அடுத்த கபில் தேவ் என்றும் புகழப்பட்டார். அதன்பின்னர் தொடர்ந்து இந்திய அணியில் இடம்பெற்று வரும் அவர் உலக கோப்பை தொடருக்குப் பின்னர் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக சிகிச்சை மேற்கொண்டு தற்போது இந்திய அணிக்கு திரும்பும் வாய்ப்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் தற்போது அவர் அண்டர் 17 அணியில் தான் விளயாடாதது குறித்து ஒரு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது : பரோடா அணிக்காக நான் 17 வயதுக்குட்பட்ட கோப்பை அணியில் அணியில் விளையாடாததற்கு என்னுடைய ஆட்டிட்யூட் காரணமாக அமைந்தது. அப்பொழுது உண்மையில் ஆட்டிட்யூட் என்றால் எனக்கு என்ன அர்த்தம் என்று கூட தெரியாது. அதனை தொடர்ந்து மூன்றாண்டுகள் கிரிக்கெட்டிற்காகவே செலவிட்டேன்.

வெளியுலக தொடர்பு, நண்பர்கள் என அனைத்தையும் மறந்து கிரிக்கெட்டில் முழு கவனம் செலுத்தினேன். ஆனால் என்னுடைய ஆட்டிடியூட் வேறு மாதிரி இருக்கிறது என்று என்னை 17 வயதுக்கு உட்பட்டோர் அணியில் சேர்க்க வில்லை. ஆனால் உண்மையில் எனக்கு அந்த வயதில் ஆட்டிட்யூட் என்றால் என்னவென்றே தெரியாது.

Pandya-1

கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த நான் அதன்பிறகு படிப்படியாக எனது திறமையை வெளிப்படுத்த தற்போது என்னுடைய இலக்கான இந்திய அணியில் விளையாடி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று பாண்டியா பேட்டி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement