தனது மகனின் பெயரை இன்ஸ்டாகிராம் மூலம் வெளியிட்ட ஹார்டிக் பாண்டியா – நல்ல தமிழ் பேரு தான் வச்சிருக்காரு

Natasa-1

இந்திய அணியின் இளம் ஆல்ரவுண்டரான ஹார்திக் பாண்டியா இந்திய அணிக்காக இதுவரை 11 டெஸ்ட் போட்டிகளிலும், 54 ஒருநாள் போட்டிகளிலும், 40 டி20 போட்டிகளிலும் விளையாடி உள்ளார். இவருக்கும் செர்பிய அழகியான நட்டாஷாவிற்கும் காதல் என்று கிசுகிசுக்கப்பட்ட நிலையில் ஜனவரி ஒன்றாம் தேதி நிச்சயதார்த்தம் நடந்தது என்று பாண்டியா அறிவித்தார்.

Natasa 1

இருவரும் துபாயில் நடுக்கடலில் மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர் அதற்கு அப்போதே பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் அதனைத்தொடர்ந்து விரைவிலேயே இருவரும் திருமணத்திற்கு முன்பே தங்களுக்கு குழந்தை பிறக்க இருப்பதாகவும் அறிவித்து அதிர்ச்சி அளித்திருந்தனர்.

இந்நிலையில் நிறைமாத கர்ப்பமாக இருந்த நட்டாஷா இந்த மாத துவக்கத்தில் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார் இந்த தகவலை ஹார்டிக் பாண்டியா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அதன்படி அவர் அதில் குறிப்பிட்டதாவது :

 

View this post on Instagram

 

We are blessed with our baby boy ❤️🙏🏾

A post shared by Hardik Pandya (@hardikpandya93) on

 

View this post on Instagram

 

The blessing from God 🙏🏾❤️ @natasastankovic__

A post shared by Hardik Pandya (@hardikpandya93) on

- Advertisement -

 

View this post on Instagram

 

Roses for my rose 🌹 Thank you for giving me the best gift ever 🙏🏾❤️

A post shared by Hardik Pandya (@hardikpandya93) on

நாங்கள் ஆண் குழந்தையுடன் ஆசீர்வதிக்கப் பட்டிருக்கிறோம் என்று தனது குழந்தையின் கைகளை பிடித்திருப்பது போன்ற புகைப்படத்தை ஹார்டிக் பாண்டியா பதிவிட்டார். அவரின் அந்த பதிவு அப்போது இணையத்தில் வைரலாகியது. மேலும் அந்த புகைப்படம் அதிகளவு பகிரப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

agastya

இந்நிலையில் தற்போது தனது குழந்தைக்குக்கு பரிசாக கிடைத்த ஒரு கார் பொம்மையின் புகைப்படத்தை பகிர்ந்து அகஸ்தியாவுக்கு கிடைத்த முதல் பரிசு என்று பகிர்ந்துள்ளார். இதன்மூலம் அவரது மகனுக்கு அவர் அகஸ்தியா என்று பெயரிட்டுள்ளது தெரியவந்துள்ளது.