ஆஸ்திரேலிய அணிக்கெதிரான போட்டியில் நான் பந்துவீசாததற்கு இதுவே காரணம் – ஹர்திக் பாண்டியா வெளிப்படை

Pandya6
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டியில் நேற்று சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஆனாலும் நேற்றைய போட்டியில் இந்திய அணியின் முழுநேர பேட்ஸ்மேனாக களமிறங்கிய அதிரடி வீரர் ஹர்திக் பாண்டியா 76 பந்துகளில் 90 ரன்களை குவித்து அசத்தினார்.

Pandya-3

- Advertisement -

பேட்டிங்கில் அதிரடியை வெளிப்படுத்தினாலும் அவர் பவுலிங் செய்யாதது இந்திய ஏற்பட்ட பெரும் இழப்பாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் தான் ஏன் பந்து வீசவில்லை என்பது குறித்த தனது கருத்தினை அவர் வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : நான் எனது பந்துவீச்சில் கவனம் செலுத்தி வருகிறேன். ஆனால் இப்பொழுது பந்துவீசும் அளவிற்கு என்னுடைய உடல் ஒத்துழைக்கவில்லை.

மேலும் சரியான நேரம் வரும்போது நான் பந்து வீசுவேன் எனது பந்துவீச்சில் 100% திறனைக் கொண்டு வர விரும்புகிறேன். சர்வதேச அளவிற்கு தேவையான வேகத்தில் பந்து வீச விரும்புகிறேன். மேலும் நீண்டகாலத் திட்டத்தை இந்திய அணி யோசித்து வருகிறது. அடுத்து வரும் t20 உலகக்கோப்பை மற்ற முக்கியமான தொடர்களை யோசிக்கும் போது என்னுடைய பந்துவீச்சு அந்த தொடரில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கலாம்.

Pandya 3

எனவே கொஞ்சம் நேரம் எடுத்து என்னுடைய உடல் தகுதியை பௌலிங் செய்யும் அளவிற்கு மேம்படுத்திக்கொண்டு பிறகு பந்துவீச திட்டமிட்டு உள்ளேன் என்று கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் :

Pandya

இந்திய அணிக்காக விளையாடும் ஆல்ரவுண்டர் யாராவது ஒருவரை கண்டுபிடிக்க வேண்டும் அவர்களை வளர்த்து விளையாட வைக்க வேண்டும். ஏனெனில் 5 பந்துவீச்சாளர்கள் உடன் விளையாடுவது கஷ்டமானது. யாராவது ஒருவருக்கு காயம் ஏற்பட்டால் அந்த இடத்தை நிரப்புவதற்காக ஒரு வீரர் தயாராக இருக்க வேண்டும் என்று பாண்டியா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement