இன்றோடு மூன்று ஆண்டுகள் ஆகிறது. இன்னும் எனக்கு இது கனவாகத்தான் உள்ளது – ஹார்டிக் பாண்டியா

Pandya
- Advertisement -

இந்திய அணியில் இளம் ஆல்ரவுண்டரான ஹர்டிக் பாண்டியா முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக தற்போது லண்டனில் அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஓய்வில் உள்ளார். மேலும் அவரது அன்றாட நடவடிக்கைகளை தனது ட்விட்டர் பக்கத்திலும் ரசிகர்களுக்காக அவர் பதிவிட்டு வருகிறார்.

Pandya

- Advertisement -

மேலும் காயத்தால் தற்போது தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடர் மற்றும் வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரை தவறவிட்ட பாண்டியா விரைவில் பயிற்சிகளை மேற்கொண்டு அணிக்கு திரும்ப இந்திய ரசிகர்கள் அவருக்கு சமூக வலைதளம் மூலம் வாழ்த்து மற்றும் ஆறுதலை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாண்டியா இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அதில் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாள் நாளில்தான் தான் இந்திய அணியில் இணைந்ததாகவும் இது ஒரு பெருமையான மற்றும் என் வாழ்வில் மறக்க முடியாத நாள் என்றும் பாண்டியா பதிவிட்டுள்ளார். மேலும் எனது இந்திய அணியில் இடம்பெறுவது என்பது எனது சிறு வயதில் இருந்தே நான் கண்ட கனவு மேலும் இதை விட பெருமையான தருணம் என் வாழ்வில் கிடையாது என்றும் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

அந்த புகைப்படத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான ஆல்ரவுண்டர் கபில்தேவ் அவருக்கு ஒருநாள் போட்டியின் இந்திய தொப்பியை வழங்கி இந்திய அணிக்கு அவர் அறிமுகமாகும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

Advertisement