3 ஆவது டெஸ்ட் போட்டியில் பேட்டிங்கில் மட்டுமல்ல. பவுலிங்கிலும் ஜொலிக்கவுள்ள அதிரடி வீரர் – விவரம் இதோ

IND
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் முக்கியமான மாற்றங்கள் சில செய்யப்பட உள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. முதல் டெஸ்டில் இந்தியா தோல்வி அடைந்த நிலையில் இரண்டாவது டெஸ்டில் இந்தியா வெற்றிபெற்றது. இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாட கடுமையாக தயாராகிக் கொண்டு இருக்கிறது. மூன்றாவது டெஸ்ட் போட்டி பிங்க் பால் போட்டியாகும்.

INDvsENG

- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட உள்ளது. இதற்காக இந்திய அணியில் 3 ஸ்பீட் பவுலர்கள் களமிறக்கப்பட உள்ளனர். 2 ஸ்பின் பவுலர்கள் மட்டுமே ஆட வைக்கப்பட உள்ளனர். இதில் பும்ரா, அக்சர், அஸ்வின் ஆடுவது உறுதியாகிவிட்டது. இஷாந்த் மற்றும் சிராஜ் இடையே இரண்டாவது ஸ்பீட் பவுலருக்கான போட்டி நிலவி வருகிறது.

மூன்றாவது ஸ்பீட் பவுலராக ஆல் ரவுண்டர் வீரரை களமிறக்க இந்திய அணி விரும்புகிறது.இதற்காக ஹர்திக் பாண்டியாவை இந்திய அணி வாரியம் அணுகி உள்ளது. இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா ஆல் ரவுண்டராக அறிமுகம் ஆனார். ஆனால் கடந்த வருடம் இவரின் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அதன்பின் பவுலிங் செய்யவில்லை. கடந்த இரண்டு வருடத்தில் இவர் மொத்தமாகவே 8-10 ஓவர்கள் மட்டுமே வீசி இருக்கிறார்.

pandya

இந்த நிலையில் இவரை மீண்டும் பவுலிங் செய்ய வைக்க பயிற்சி குழு விரும்புகிறது . இதற்காக அவருக்கு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. பாண்டியாவும் தற்போது பிங்க் பாலை வைத்து பயிற்சி மேற்கொண்டு வருகிறார். மேலும் முதுகு பகுதியில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக கடந்த ஆண்டு அறுவை சிகிச்சை செய்து கொண்ட பாண்டியா ஐ.பி.எல் தொடர் முழுவதுமாக பவுலிங் செய்யவில்லை.

pandya

இருப்பினும் அதற்கடுத்த ஆஸ்திரேலிய தொடரில் ஒருசில ஓவர்களை வீசி விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருந்தார். மேலும் உடல்நிலை ஒத்துழைக்கும் போது தான் பந்துவீசுவேன் என்று கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது இங்கிலாந்து அணிக்கெதிரான விளையாடி பந்து வீச தயாராகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement