டி20 உலககோப்பை அருகில் வருவதால் ஹார்டிக் பாண்டியா எடுத்துள்ள முடிவு – பயம் எப்படி வேலை செய்து பாருங்க

Pandya6
- Advertisement -

இந்திய அணியின் இளம் அதிரடி ஆல்ரவுண்டர் ஆன ஹார்டிக் பாண்டியா இந்திய அணியில் அறிமுகமானதில் இருந்து தொடர்ந்து தனது சிறப்பான பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் அசத்தியதால் தொடர்ந்து மூன்று வகையான கிரிக்கெட்டிலும் இடம்பெற்று விளையாடி வந்தார். இருப்பினும் அவருக்கு சில ஆண்டுக்கு முன்பு முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் கடந்த ஆண்டு லண்டனில் அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.

Pandya

- Advertisement -

அதனைத் தொடர்ந்து சில மாதங்கள் கிரிக்கெட் விளையாடாமல் இருந்த ஹார்டிக் பண்டியா மீண்டும் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடி இந்திய அணியில் இடம் பிடித்தார். இருப்பினும் நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான தொடரின் போது ஹார்டிக் பாண்டியா பந்துவீசவில்லை. அதனால் அவர் மீது பெரிய அளவில் விமர்சனம் எழுந்தது.

இருந்தாலும் இந்திய அணி அவரின் திறமை மீது இருந்த நம்பிக்கையால் அவரை பேட்ஸ்மேனாக மட்டுமே களமிறக்கியது. அவர் பேட்ஸ்மேனாக சிறப்பாக விளையாடினாலும் ஒரு ஆல்ரவுண்டராகதான் அவர் இந்திய அணியில் இடம் பெற முடியும் என்று கூறி இந்திய அணியின் தேர்வுக்குழு இங்கிலாந்து தொடருக்கான டெஸ்ட் தொடரிலிருந்து ஹார்திக் பாண்டியாவை அதிரடியாக நீக்கியது.

pandya

மேலும் ஹார்திக் பாண்டியா பந்து வீசினால் மட்டுமே அவர் டெஸ்ட் அணியில் சேர்க்கப்படுவார் என்றும் வெளிப்படையாக அறிவித்து இருந்தது. இந்நிலையில் அடுத்து வரும் டி20 போட்டிகளில் தனது இருப்பை உறுதி செய்ய தற்போது ஹர்டிக் பண்டியா ஒரு புதிய முடிவை எடுத்துள்ளார். இதுகுறித்து தனியார் பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள பாண்டியா கூறுகையில் : டி20 உலகக்கோப்பை போட்டிகள் அனைத்திலும் நான் பந்து வீசுவேன்.

pandya

அதற்கு முன்பு என்னால் என்ன செய்ய முடியும் என்பதை உறுதி செய்துகொண்டு டி20 கோப்பை போட்டிகளின் மீது கவனத்தை செலுத்துவேன். என்னால் பந்துவீச முடியும் என்பது எனக்கு தெரியும் அதனால் அதனை நான் மிஸ் பண்ண மாட்டேன். ஆபரேஷனுக்குப் பிறகு நான் பந்துவீச்சில் என்னுடைய வேகத்தை குறைக்கவில்லை. நூறு சதவீத உடல் தகுதி இருக்கும் போது மட்டுமே நான் விளையாட விரும்புகிறேன். 50% உடல் தகுதியுடன் நான் விளையாட விரும்ப வில்லை எனவும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement