திருமணம் செய்யாமலே தந்தையாக மாறியுள்ள இந்திய கிரிக்கெட் வீரர். வேற லெவல் சார் நீங்க – விவரம் இதோ

Natasa

ஹர்திக் பாண்டியா இந்திய அணிக்காக கடந்த 2016ஆம் ஆண்டில் இருந்து விளையாடி வருகிறார். மும்பை இந்தியன்ஸ் அணியில் நன்றாக விளையாடியதன் மூலம் இந்திய அணியில் இடம் பிடித்தவர். இந்திய அணியில் இடம் பிடித்த பின்னர் இவரது வாழ்க்கை மாறியது. ஹர்திக் பாண்டியா மற்றும் செர்பிய நடிகையான நட்டாஷா ஸ்டான்கோவிக் இருவரும் கடந்த ஒரு வருடமாக டேட்டிங் செய்து வந்தனர்.

Natasa-2

அதன் பின்னர் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இருவரும் நிச்சயம் செய்து கொண்டனர். அந்தக் கணம் முதல் இருவரும் ஒன்றாக ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தனர் .இந்த ஜோடியும் அவர் அண்ணன் க்ருனால் பாண்டியாவின் ஜோடியும் ஒரே வீட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஹர்திக் பாண்டியாவின் நிச்சயம் செய்யப்பட்ட காதலி தற்போது கர்பம் ஆகியுள்ளார்.

இதனை இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள பதிவில்…உனக்கும் எனக்குமான இந்த வாழ்க்கை பயணம் தற்போது வரை மிகச் சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. அந்த வாழ்க்கையை இன்னும் சிறப்பாக வதற்காக இன்னொருவர் எங்களது வாழ்க்கையில் வரவிருக்கிறார்.

என் வாழ்வில் இந்த கட்டம் மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கிறது. உங்களுடைய ஆசிகள் எங்களுக்கு தேவை என்று குறிப்பிட்டு பதிவுசெய்துள்ளார் ஹர்திக் பாண்டியா. ஹர்திக் பாண்டியா வின் இந்த சந்தோஷமான செய்தியை தெரிந்து கொண்ட விராட் கோலி மற்றும் ரவி சாஸ்திரி உள்ளிட்டோர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

ஹர்திக் பாண்டியா அவருக்கு தற்போது 26 வயதுதான் ஆகிறது. ஆனால் முன்னாள் கேப்டனான தோனி தனது 32 வயதில் தான் குழந்தை பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் தற்போதைய கேப்டன் விராட் கோலிக்கு 31 வயதாகிறது இன்னும் அவர் குழந்தை பெற்றுக் கொள்வது பற்றி யோசிக்கவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.