முதல் ஆளாக தர்மசாலா வந்து பயிற்சியை துவங்கிய நட்சத்திர வீரர் – பி.சி.சி.ஐ வெளியிட்ட பதிவு

Practice
- Advertisement -

வரும் 12ம் தேதி தென்ஆப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இந்த போட்டிகள் கொல்கத்தா, தர்மசாலா மற்றும் லக்னோ ஆகிய மைதானங்களில் நடக்க உள்ளது. இதற்கான இந்திய அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் இளம் வீரர்கள் சிலர் இடம்பெற்றுள்ளனர்.

Ind vs Rsa

- Advertisement -

இருந்தாலும் இந்திய அணியின் காம்பினேஷன் சற்று வித்தியாசமாகத்தான் இருக்கும். ஏனென்றால் ஏற்கனவே இந்திய அணி நியூசிலாந்தில் தோற்றுவிட்டது. இதற்காக விராட் கோலி புதிதாக சில உத்திகளைக் கையாள வேண்டியுள்ளது. இந்த அணியில் ஏற்கனவே காயத்திலிருந்து புவனேஸ்வர் குமார், ஷிகர் தவான் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் மீண்டும் அணிக்குள் வந்துள்ளனர்.

இதன் காரணமாக ஒரு சில வீரர்களுக்கு அணியில் இடம் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது. துவக்க வீரர்களாக இளம் வீரரான பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் இறங்க பெரிய வாய்ப்புகள் உள்ளது. ஏனெனில் அதிரடி வீரரான கேஎல் ராகுல் கீப்பிங் பணியை செய்வதுடன் 5வது இடத்தில் களமிறக்கவே அணி நிர்வாகம் ஆசை காட்டும்.

இந்நிலையில் இந்த தொடருக்கான அணியில் இடம் பெற்றுள்ள இளம் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா பல மாதங்களுக்குப் பிறகு முதல் போட்டியில் களமிறங்க உள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் அவர் தற்போது நடைபெற்று முடிந்த உள்ளூர் டி20 தொடரில் இரண்டு சதங்கள் அடித்து தனது திறமையை மீண்டும் நிரூபித்து உள்ளார்.

- Advertisement -

இதன் காரணமாக அவருக்கு உடனடியாக வாய்ப்பு கிடைத்தது. எனவே தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதல் போட்டியில் விளையாட இருக்கும் பாண்டியா அந்த போட்டியிலும் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தர்மசாலா வந்து இறங்கிய பாண்டியா பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றினையும் தற்போது பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது.

அந்த வீடியோவும் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வர ஏற்கனவே பாண்டியா பயிற்சியை ஆரம்பித்து விட்டார் இனி அவ்வளவுதான் என்பது போல ரசிகர்கள் இந்த வீடியோவை பகிர்ந்து குறிப்பிடத்தக்கது.

Advertisement