2017 வேதனையை மறக்கல.. என்னை விட இந்தியாவுக்காக அவர் நல்லா ஃபினிஷிங் பண்ணிட்டாரு.. பாண்டியா பேட்டி

Hardik Pandya
- Advertisement -

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வென்றது. நேற்று துபாயில் நடைபெற்ற மாபெரும் இறுதிப் போட்டியில் வலுவான நியூசிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. அதனால் 2002, 2013க்குப்பின் மூன்றாவது முறையாக சாம்பியன்ஸ் டிராபியை வென்று இந்தியா உலக சாதனை படைத்துள்ளது.

முன்னதாக துபாயில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய 252 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா 71, ஸ்ரேயாஸ் ஐயர் 48, ராகுல் 34* ரன்கள் எடுத்து வெற்றி பெற வைத்தனர். குறிப்பாக கடைசி நேரத்தில் பாண்டியா பினிஷிங் செய்ய முயற்சித்து 18* ரன்னில் அவுட்டானார்.

- Advertisement -

மறக்க முடியாத 2017:

இருப்பினும் மறுபுறம் ரவீந்திர ஜடேஜா பவுண்டரியுடன் ஃபினிஷிங் செய்து இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார். அதைப் பார்த்து இந்திய ரசிகர்களுக்கு 2017 சாம்பியன்ஸ் டிராபி ஃபைனல் நினைவுக்கு வராமல் இருக்காது என்றே சொல்லலாம். ஏனெனில் பரம எதிரி பாகிஸ்தானுக்கு எதிரான அந்தப் போட்டியில் 338 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு ஆரம்பத்திலேயே ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஏமாற்றத்தை கொடுத்தனர்.

அப்போது மிடில் ஆர்டரில் வந்த பாண்டியா பாகிஸ்தானை முரட்டுத்தனமாக அடித்து நொறுக்கி 76 (43) ரன்கள் குவித்ததால் இந்தியா வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது ரவீந்திர ஜடேஜா தேவையின்றி அவரை ரன் அவுட் செய்ததால் இந்தியாவின் தோல்வி உறுதியானது. இந்நிலையில் 2017 தோல்வியை தம்மால் மறக்க முடியாது என்று ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

- Advertisement -

ராகுலுக்கு பாராட்டு:

இருப்பினும் இன்று தம்மை விட கேஎல் ராகுல் சிறப்பாக விளையாடி போட்டியை ஃபினிஷ் செய்ததாகவும் பாண்டியா கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சாம்பியன்ஸ் டிராபி போன்ற ஐசிசி கோப்பையை வென்றது அற்புதமான வெற்றி. 2017 ஃபைனல் என்னுடைய இதயத்துக்கு மிகவும் நெருக்கமாக இருப்பதை நினைத்துப் பார்க்கிறேன்”

இதையும் படிங்க: 8 ஆவது இடத்தில் ஜடேஜா இருப்பதால் இருப்பதால் எனக்கு அந்த ப்ரீடம் இருக்கு – ரோஹித் சர்மா மகிழ்ச்சி

“அந்த நேரத்தில் என்னால் ஃபினிஷிங் செய்ய முடியவில்லை. ஆனால் இந்தத் தொடரில் நாங்கள் அனைவரும் நன்றாக விளையாடி வெற்றியில் பங்காற்றியது மகிழ்ச்சியை கொடுக்கிறது. புத்திசாலித்தனம், பொறுமை ஆகியவற்றைக் கொண்டுள்ள கேஎல் ராகுல் சரியான நேரத்தில் தனது வாய்ப்புகளை எடுத்தார். இது தான் கேஎல் ராகுல் என்று நினைக்கிறேன். அவரிடம் அற்புதமான திறமை இருக்கிறது. அவர் பந்தை அடிக்கும் விதத்தில் வேறு யாரும் அடிக்க முடியாது என்று நினைக்கிறேன். இன்று அவருடைய திறமைக்கான கண்காட்சியாக அமைந்தது” எனக் கூறினார்.

Advertisement