- Advertisement -
ஐ.பி.எல்

திட்டம் போடாமயே.. ஹைதராபாத்தை சாய்த்து 4வது தொடர் வெற்றி பெற இதான் காரணம்.. கேப்டன் பாண்டியா மகிழ்ச்சி

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 23ஆம் தேதி ஹைதராபாத் நகரில் 41வது போட்டி நடைபெற்றது. அதில் ஹைதராபாத் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த மும்பை தங்களுடைய 5வது வெற்றியை பெற்றது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ஹைதராபாத் தடுமாற்றமாக பேட்டிங் செய்து 20 ஓவரில் 143-8 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதிகபட்சமாக ஹென்றிச் கிளாசின் 71, அபினவ் மனோகர் 43 ரன்கள் எடுத்த நிலையில் மும்பைக்கு அதிகபட்சமாக ட்ரெண்ட் போல்ட் 4 விக்கெட்டுகளை எடுத்தார். அடுத்து விளையாடிய மும்பை அதிரடியாக பேட்டிங் செய்து 15.4 ஓவரிலேயே 146-3 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகப்பட்சமாக ரோகித் சர்மா 70, சூரியகுமார் 40* ரன்கள் எடுத்தனர்.

- Advertisement -

மும்பை வெற்றி:

இதனால் தொடர்ந்து நான்காவது வெற்றியைப் பெற்ற மும்பையில் புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகளுடன் 3வது இடத்திற்கு முன்னேறி அசத்தியது. மறுபுறம் ஹைதராபாத் தங்களுடைய 6வது வெற்றியைப் பெற்று 9வது இடத்தில் நீடிக்கிறது. இந்நிலையில் ரோஹித் சர்மா முதல் போல்ட் வரை உங்களுடைய நட்சத்திர வீரர்கள் சரியான நேரத்தில் ஃபார்முக்கு வந்துள்ளதே இந்தத் தொடர் வெற்றிகளுக்கு காரணம் என்று மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

மேலும் இளம் வீரர் விக்னேஷ் புதூர் நீண்ட நாட்களுக்கு இந்தப் போட்டியில் வாய்ப்பைப் பெற்று ஒரு ஓவரில் 15 ரன்கள் கொடுத்தார். அனுபவமின்மையால் அவர் அப்படி பரிதாபமாக அடி வாங்கியதாக தெரிவிக்கும் பாண்டியா இது பற்றி பேசியது பின்வருமாறு. “வெற்றிகளை உங்கள் பின்னே வைத்திருப்பது நல்லது. எங்களுடைய வீரர்கள் சரியான வழியில் வேகத்தை எடுத்துள்ளார்கள்”

- Advertisement -

பாண்டியா மகிழ்ச்சி:

“ரோஹித், தீபக், போல்ட், சூரியகுமார் அனைவரும் அசத்துகின்றனர். ஒருமுறை எங்கள் வீரர்கள் அனைவரும் அசத்தத் துவங்கி விட்டால் எங்களுடைய அணி முழுமையான கலவையைப் பெறும் என்று நான் உணர்ந்தேன். மொத்தமாக இது அற்புதமான வெற்றி. கேப்டன்ஷிப் என்பது உள்ளுணர்வுகளைப் பொறுத்தது. முன்கூட்டியே திட்டங்களை வகுத்து அதைச் சார்ந்திருக்காமல் களத்தில் போட்டியைப் பார்த்து அதற்குத் தகுந்தார் போல் ரியாக்சன் செய்கிறேன்”

இதையும் படிங்க: 4க்கு 4.. 9 வருடம் கழித்து மிரட்டிய ஹிட்மேன்.. ஹைதராபாத்தை வீழ்த்திய மும்பை 5 வருடம் கழித்து அபார வெற்றி

“விக்னேஷ் புதூருக்கு அந்த நேரத்தில் வாய்ப்பை வழங்கி விக்கெட் எடுக்க உதவ முயற்சித்தோம். இளம் வீரரான அவர் நிறையப் போட்டிகளை விளையாடாத காரணத்தால் இன்றைய நாள் கடினமாக அமைந்தது என்பதைப் புரிந்து கொள்கிறோம். எங்களால் அனைத்து துறைகளிலும் இன்னும் நன்றாக விளையாட முடியும். நாங்கள் தெளிவாக புத்திசாலித்தனமாக விளையாடுவதைப் பற்றி பேசி வருகிறோம். ஒவ்வொரு போட்டியாக எடுத்துக் கொள்ளும் நாங்கள் இந்த வெற்றியால் திருப்தியடைந்துள்ளோம்” என்று கூறினார்.

- Advertisement -