இதுக்கு உதவிய லைஃப் பார்ட்னருக்கு நன்றி.. இந்திய ரசிகர்களுக்காக 10 நிமிஷம் ராக்ஸ்டாராக இருக்கனும்.. பாண்டியா பேட்டி

Hardik Pandya
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நேற்று கட்டாக் மைதானத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் 101 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 176 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா அட்டகாசமாக விளையாடி 57* ரன்கள் எடுத்தார். அடுத்து விளையாடிய தென் ஆப்பிரிக்காவை 74 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா அபார வெற்றி பெற்றது.

அதிகபட்சமாக தேவால்ட் பிரேவிஸ் 22 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங், ஜஸ்ப்ரித் பும்ரா, அக்சர் பட்டேல், வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அந்த வெற்றிக்கு 57* ரன்கள் மற்றும் 1 விக்கெட் எடுத்து முக்கிய பங்காற்றிய ஹர்திக் பாண்டியா ஆட்டநாயகன் விருது வென்றார். கடந்த ஆசியக் கோப்பையில் காயமடைந்த அவர் மீண்டும் குணமடைந்து இப்போட்டியில் சூப்பரான கம்பேக் கொடுத்துள்ளார்.

- Advertisement -

ரசிகர்களுக்காக ராக்ஸ்டார்:

குறிப்பாக 48/3 என இந்திய அணி தடுமாறிய போது மிடில் ஆர்டரில் அற்புதமாக விளையாடிய பாண்டியா 6 பவுண்டரி 4 சிக்ஸரை பறக்க விட்டு காப்பாற்றினார். இந்நிலையில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் தம்முடைய ஆட்டத்தைப் பார்க்க வருவது சிறப்பாக பேட்டிங் செய்ய வேண்டும் என்ற உத்வேகத்தைக் கொடுப்பதாக பாண்டியா தெரிவித்துள்ளார்.

எனவே ரசிகர்களுக்காக 10 நிமிடம் ராக்ஸ்டார் போல விளையாடுவது அவசியமென்று தெரிவிக்கும் அவர் தனது மனைவி விவாகரத்தால் மனதளவில் பிரச்சினைகளைச் சந்தித்ததாக தெரிவித்துள்ளார். அப்போது புதிய வாழ்க்கைத் துணைவியாக வந்த மஹிகா சர்மா கம்பேக் உதவியதாகவும் பாண்டியா தெரிவித்துள்ளார். இது பற்றி பிசிசிஐ இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

புதிய துணைவி:

“நீங்கள் ராக்ஸ்டாராக களத்துக்கு வந்து 10 நிமிடங்கள் அசத்தினால் ரசிகர்கள் வெறித்தனமாவார்கள். அதுவே எனக்கு மிகப்பெரிய ஊக்கமாகும். வாழ்க்கை என் மேலே நிறைய எலுமிச்சம் பழங்களை தூக்கி எறிந்தது. அப்போது என்னை நான் நம்பினேன். ஒருவேளை நானே என்னை நம்பாவிட்டால் யார் நம்புவார்கள்? எனது மனம் வலுவாக, பெரிதாக, சிறப்பாக கம்பேக் கொடுப்பதிலேயே இருந்தது”

“ஒவ்வொரு முறையும் களத்துக்குச் செல்லும் போது ரசிகர்கள் அதற்காக காத்திருப்பதாக நான் உணர்கிறேன். அவர்கள் எனது பேட்டிங்கை பார்க்க வருகிறார்கள். ஏனெனில் வலுவாக இருக்கும் நான் நிறைய விஷயங்களை எளிதாக செய்துள்ளேன். அது எனக்கு ஆதரவளித்து தன்னம்பிக்கையுடன் எனது திறனை நம்புவதற்கான உதவியைக் கொடுக்கிறது”

இதையும் படிங்க: 59 ரன்கள் அடித்ததோடு சேர்த்து 4 இந்திய வீரராக ஹார்டிக் பாண்டியா நிகழ்த்திய சாதனை – விவரம் இதோ

“ஒரு வீரராக என்னை நம்புகிறேன். காயங்கள் உங்களை மனதளவில் சோதித்து நிறைய சந்தேகத்தைப் போடும். எனது பார்ட்னருக்கும் ஸ்பெஷல் நன்றிகள். எனது வாழ்க்கையில் நுழைந்தது முதல் எனக்கு அவர் சிறந்தவராக இருக்கிறார். அவள் வந்தது முதல் எனக்கு நிறைய நல்லது நடந்துள்ளது. அதனால் தற்போது பாண்டியா ஒவ்வொரு நொடியும் களத்தில் விளையாட விரும்புவது பெரிய ஊக்கமாகும்” என்று கூறினார்.

Advertisement