இந்த குழந்தையும், இந்த பெரியவரையும் மிகவும் மிஸ் செய்கிறேன் – உருகிய பாண்டியா

Pandya

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான தோனி இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பை தொடருக்கு பின்னர் இன்னும் இந்திய அணியில் விளையாடவில்லை. மேலும் தற்போது நடைபெற உள்ள வங்கதேச அணிக்கு எதிரான தொடரிலும் தோனிக்கு இடம் கிடைக்கவில்லை. அவருக்கு பதிலாக பண்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அதேபோல இந்திய அணியின் முன்னணி வீரரான ஹார்டிக் பாண்டியா தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டி20 போட்டியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக தற்போது லண்டன் சென்று அறுவை சிகிச்சை மேற்கொண்டு இந்தியா திரும்பிய ஓய்வில் இருக்கிறார்.

இந்நிலையில் பாண்டியா தற்போது தோனி மற்றும் ஜிவா தோனி இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து நான் இந்த சிறுமியையும் இந்த பெரியவரையும் மிஸ் செய்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். இதனைக் கண்ட ரசிகர்களும் நாங்களும் உங்களை மிஸ் செய்கிறோம் என்று கமெண்டுகளையும் செய்து வருகின்றனர்.