தனது காதலியின் குடும்பத்தினரை மும்பையில் ஹோட்டலில் சந்தித்த ஹார்டிக் பாண்டியா – வைரலாகும் புகைப்படம்

Natasa

இந்திய அணியின் முன்னணி இளம் ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியாவின் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக லண்டன் சென்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன் பிறகு தற்போது இந்தியா திரும்பியுள்ள பாண்டியா மீண்டும் கிரிக்கெட் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். வரும் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்திய ஏ அணிக்காக விளையாடவும் தயாராகி வருகிறார்.

Natasa 1

இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு தனது காதலியான நட்டாஷா ஸ்டேன்கோவிக் என்பவரை துபாயில் வைத்து நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். மேலும் அவர்களின் நிச்சயதார்த்தத்தை மோதிரத்துடன் கூடிய புகைப்படமும் இணையத்தில் வெளியாகி வைரலாகியது. மேலும் பாண்டியாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர்களது புகைப்படத்தை பகிர்ந்து அவர்களது உறவினை உறுதி செய்தார்.

பாண்டியாவின் இந்த நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக அவருக்கு தொடர்ந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. இந்திய அணி வீரர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் அவரது பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் தற்போது பாண்டியா தற்போது நட்டாஷாவின் குடும்பத்தினரை மும்பையில் உள்ள ஹோட்டலில் சந்தித்துள்ளார்.

natasa 1

Natasa

- Advertisement -

அது குறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. மேலும் இவர்கள் இருவரும் நிச்சயதார்த்தத்தை முடித்து உள்ள நிலையில் பாண்டியா தற்போது நட்டாஷாவின் குடும்பத்தினரை சந்தித்து பேசியுள்ளார். ஆனால் இவர்களது திருமணம் குறித்த எந்த தகவலும் அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை மேலும் நிச்சயதார்த்தத்தில் ரகசியமாக திடீரென சர்ப்ரைஸ் ஆக செய்த அவர்கள் திருமணத்தை எவ்வாறு செய்ய போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.