கடந்த 5 மாதத்திற்கும் மேலாக ஹர்திக் பாண்டியா இந்திய அணியில் இடம் இல்லாமல் தவித்து வருகிறார். முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக லண்டன் சென்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட பாண்டியாவின் காயம் ஒருபுறம் இருந்தாலும் புதிதாக அணியில் பல வீரர்கள் அவரை இடத்தை நிரப்ப ஆரம்பித்துவிட்டனர் .

இந்நிலையில் காயத்திற்கு பின்னர் களம் இறங்கி ஹர்திக் பாண்டியா தனது ஆல்ரவுண்டர் பணியை சிறப்பாக செய்துள்ளார். டாக்டர் டி ஒய் பாட்டில் டி20 தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பாங்க் ஆஃப் பரோடா அணிக்கு எதிரான போட்டியில் ரிலையன்ஸ்-1 அணிக்காக களம் இறங்கினார் ஹர்திக் பாண்டியா.
பேட்டிங்கின் போது 25 பந்துகளை சந்தித்த அவர் 4 இமாலய சிக்சர்களுடன 38 ரன்கள் விளாசினார். பாண்டியாவின் இந்த அதிரடியினால் அந்த அணி 150 ரன்கள் சேர்த்தது . அதன் பின்னர் பந்துவீச்சில் அற்புதமாக வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் ரிலையன்ஸ் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நீண்ட நாட்களாக விளையாடாமல் இருந்த பாண்டியா மீண்டும் இந்திய அணிக்கு திரும்பும்போது அவரது ஆட்டம் மிகவும் முக்கியம் என்று எதிர்பார்த்த நிலையில் பாண்டியாவின் இந்த அசத்தலான ஆட்டம் மீண்டும் ரசிகர்களுக்கு உற்சாகத்தை தந்துள்ளது. இதனால் ஐபிஎல் தொடருக்கு அவர் நிச்சயம் அணியில் இணைவார். மேலும் அடுத்து வரவிருக்கும் டி20 உலக கோப்பையில் ஹர்திக் பாண்டியா இவ்வாறு ஆடுவது இந்திய அணிக்கு நல்லதே ஆகும்.



