ஹார்டிக் பாண்டியாவிற்கு கேப்டன் பதவி மறுக்கப்பட காரணம் இதுதானாம் – விவரம் இதோ

- Advertisement -

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்திருந்த இலங்கை அணிக்கு எதிரான இந்திய அணியில் இடம்பெறபோகும் வீரர்களின் பட்டியலை நேற்று வெளியிட்டிருக்கிறது பிசிசிஐ. தேவ்தத் படிக்கல், ருத்துராஜ் கெய்க்வாட், சேட்டன் சக்காரியா போன்ற இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணியை வழிநடத்தும் கேப்டன் பொறுப்பானது மூத்த வீரரான ஷிகர் தவானுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக செயல்பட அதிக வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்பட்ட மற்றொரு வீரரான ஹர்திக் பாண்டியாவிற்கு துணைக் கேப்டன் பொறுப்புகூட தராமல் விட்டிருக்கிறது இந்திய தேர்வுக்குழு.

pandya 1

- Advertisement -

ஒரே நேரத்தில் இரண்டு சர்வதேச இந்திய கிரிக்கெட் அணியை களமிறக்க முடிவு செய்த இந்திய கிரிக்கெட் நிர்வாகம், அந்த முயற்சியில் தற்பொது வெற்றியும் கண்டிருக்கிறது. முன்னனி வீரர்கள் அடங்கிய இந்திய டெஸ்ட் அணியானது இங்கிலாந்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கிறது. இதற்கிடையில் இலங்கை அணிக்கு எதிராக மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகளையும் ஜூலை மாதத்தில் நடத்த ஏற்பாடு செய்திருந்த பிசிசிஐ, இந்த தொடர்களுக்காக இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்திருக்கும் வீரர்களை தவிர்த்து மற்ற இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணி உருவாக்கப்படும் என்றும் அறிவித்திருந்தது.

விராட் கோஹ்லி இல்லாத இந்திய அணியின் கேப்டன் பொறுப்புக்கு ஷிகர் தவான் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகிய இருவருக்கும் இடையில் கடும்போட்டி நிலவியது. இந்நிலையில் இந்த தொடருக்கான வீரர்களை பரீசீலனை செய்த இந்திய தேர்வுக் குழு, ஐபிஎல் தொடர்களில் சிறப்பாக செயல்பட்டு வந்த இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கியதோடு மட்டுமல்லாமல்ல, ஹர்திக் பாண்டியாவைவிட அதிக அனுபவம் வாய்ந்த வீரரான ஷிகர் தவானை இந்திய அணியின் கேப்டனாகவும் நியமித்திருக்கிறது.

Dhawan-Pandya

மேலும் துணைக் கேப்டன் பதவியும் மற்றொரு அனுபவ வீரரான புவனேஷ் குமாருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஹர்திக் பாண்டியா ஒரு சிறந்த வீரர் என்றாலும், இளம் வீரர்களை வழிநடத்த அனுபவம் வய்ந்த வீரரான ஷிகர் தவான்தான் சரியாக இருப்பார் என்று எண்ணிய இந்திய தேர்வுக் குழு இந்த முடிவை எடுத்திருப்பாதாக தெரிகிறது. 35 வயதான ஷிகர் தவான் இந்திய அணிக்காக கடந்த 2010ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் அறிமுகமாகியிருக்கிறார். மேலும் அவருக்கு ஐபிஎல் தொடர்களில் கேப்டனாக செயல்பட்ட அனுபவமும் இருப்பதால், அவரால் இளம் வீரர்களை சிறப்பாக வழிநடத்த முடியும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

bhuvi

துணைக் கேப்டனான புவேனேஷ் குமார் 2011ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகியிருக்கிறார். இவர் ஏற்கனவே சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் துணைக் கேப்டனாக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் ஒரு நாள் போட்டிகள் தொடங்கும் இலங்கை தொடரின் முதல் போட்டி ஜூலை மாதம் 13ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இந்த சுற்றுப் பயணத்தின் இறுதிப் போட்டியான மூன்றாவது டி20 போட்டியானது ஜூலை மாதத்தின் 27 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

Advertisement