அணியில் இடம்பெறவில்லை என்றாலும் பயிற்சியில் தீவிரம் காட்டிய இளம் வீரர் – விவரம் இதோ

Pandya-1

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி இன்று பகலிரவு போட்டியாக மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

ind

இந்த பயிற்சியில் இந்திய அணி வீரர்களுடன் இளம் ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியா கலந்து கொண்டு பயிற்சி மேற்கொண்டார். கடந்த சில மாதங்களாகவே காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஓய்வில் இருந்த பாண்டியா தற்போது மீண்டும் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முழு உடல் தகுதி பெறவில்லை என்று இந்திய ஏ அணியில் இருந்து பாண்டியா விலகியுள்ளார். இந்நிலையில் நேற்று பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் முன்னிலையில் இவர் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பந்து வீசினார். மேலும் அவரது பந்து வீச்சின் போது அவர் இன்னும் முழுமையான பந்துவீச்சு திறனைப் பெறவில்லை என்று தெரியவந்துள்ளது.

Pandya

மேலும் அவரது பந்துவீச்சில் அவருக்கே திருப்தியில்லை என்றும் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்திய அணியில் தனது பழைய இடத்தை பிடிக்க தற்போது தீவிர கவனத்தை செலுத்திவரும் பாண்டியா அதற்காக மேலும் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட உள்ளதாக தெரிகிறது. ஆஸ்ரேலிய அணிக்கு எதிரான இந்த தொடரில் பாண்டியாவிற்கு பதிலாக ஷிவம் துபே இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -