ஹார்டிக் பாண்டியாவிற்கும் அவரது ஜெர்சி எண் 228க்கும் இடையே இப்படி ஒரு தொடர்பா ? – விவரம் இதோ

Pandya
- Advertisement -

இந்திய அணியின் இளம் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஆன ஹர்திக் பாண்டியா கடந்த 2016ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் அறிமுகம் ஆனார். ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக இடம்பெற்று அவர் காட்டிய அதிரடி மூலமே அவர் ஒரு சிறந்த ஆல்ரவுண்டராக அறியப்பட்டவர்.

Pandya 1

- Advertisement -

தொடர்ந்து மும்பை அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாண்டியா விரைவில் இந்திய அணிக்கும் தேர்வாகி தனது சிறப்பான ஆட்டத்தை தற்போது வரை வெளிப்படுத்தி வருகிறார். மேலும் இவரை அடுத்த கபில் தேவ் எனவும் சிலர் அழைத்து வருவது குறிப்பிடத்தக்கது. அந்த அளவிற்கு அதிரடியான பேட்டிங்கிலும் சரி, பந்துவீச்சிலும் சரி கலக்கி வருகிறார்.

இந்நிலையில் தற்போது ஹார்டிக் பாண்டியாவின் ஒருநாள் ஜெர்ஸியில் 228 என்ற நம்பருக்கான விளக்கம் வெளியாகியுள்ளது. மேலும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்கள் கேள்வி எழுப்பியது. அதில் பாண்டியாவின் 228 என்ற எண்ணிற்கு காரணம் என்ற என்ன என்று கேள்வி வெளியானது.

Pandya

அதற்கு புள்ளியல் நிபுணர் மோகன்தாஸ் மேனன் என்பவர் பதிலளித்துள்ளார். அதாவது 228 என்ற நம்பரை பாண்டியா ஏன் ஜெர்சியில் வைத்துள்ளார் என்றால் : கடந்த 2009ஆம் ஆண்டு டிசம்பரில் மும்பை அணிக்கு எதிராக விஜய் மெர்ச்சண்ட் டிராபி போட்டியில் 16 வயதுக்கு உட்பட்டோர் பரோடா அணியை ஹர்திக் பாண்டியா வழிநடத்தினார்.

- Advertisement -

அந்த ஆட்டத்தில் 8 மணி நேரம் பேட்டிங் செய்த அவர் 391 பந்துகளில் 228 ரன்களை குவித்தார் தற்போது வரை அவர் அடித்த ஒரே ஒரு இரட்டை சதம் இதுவாகும். இதனைத்தான் தனது ஜெர்ஸியில் அவர் பதிந்து நீண்டகாலமாக விளையாடினார். ஆனால் தற்போது ஆர்டிக் பாண்டியா 33 என்கிற நம்பரை அணிந்து விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Pandya 1

மேலும் அவர் அந்த போட்டியில் இரட்டை சதமடித்த அதுமட்டுமின்றி 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய சிறந்த ஆல்ரவுண்டராக தன்னை நிரூபித்தார். இதன் மூலம் 19 வயதுக்குட்பட்ட அணியிலும் அவர் தேர்வாகினர் என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement