Hardik Pandya : ஹார்டிக் பாண்டியாவின் இந்த திறமை இந்திய அணியின் மற்ற யாருக்கும் இல்லை – சேவாக்

இந்த மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடரு

sehwag
- Advertisement -

இந்த மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தயார் என்றே கூறலாம். இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.

Pandya

- Advertisement -

இந்நிலையில், இந்தியாவில் தற்போது ஐ.பி.எல் தொடர் நடைபெற்று முடிந்தது. இன்னும் சில நாட்களில் இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இங்கிலாந்து பறக்க உள்ளது. கடந்த பல தொடர்களாக இந்திய அணி மிகச்சிறந்த பார்மில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உலகக்கோப்பை தொடரின் இந்தியா அணியின் வீரர்கள் ஏப்ரல் 15 ஆம் தேதி அறிவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்டிக் பாண்டியா குறித்து முன்னாள் இந்திய வீரர் சேவாக் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : உலக கோப்பை செல்லும் இந்திய அணியில் பல திறமையான வீரர்கள் உள்ளனர். இருப்பினும் இந்த தொடரில் பாண்டியா பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று நான் நிச்சயம் கூறுவேன். ஏனெனில் தற்பொது நடந்து முடிந்த ஐ .பி.எல் தொடரில் அவரது ஆட்டம் பிரமிக்க வைத்தது.

அவரின் அதிரடியான பேட்டிங் மூலம் இந்திய அணிக்கு ரன்கள் நிச்சயமாக கிடைக்கும். மேலும் அவரைப் போன்று அதிரடியாக பேட்டிங் செய்து பந்துவீச்சிலும் குறிப்பிடும்படி செயல்படும் வீரர் தற்போது இந்திய அணியில் இல்லை என்றே கூறுவேன் என்று சேவாக் கூறினார். நடந்த ஐபிஎல் போட்டித்தொடரில் 15 போட்டிகளில் விளையாடிய ஹர்டிக் பாண்டியா 402 ரன்களை அடித்தார். ஸ்ட்ரைக் ரேட் 191, அதிகபட்சமாக 91 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement