ஹர்டிக் பாண்டியா நடராஜன் மீது இவ்வளவு பாசமாக இருக்கும் காரணம் என்ன தெரியுமா ? – விவரம் இதோ

Nattu
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடர் ஆகியவை தற்போது முடிந்துள்ளன. இந்த ஒரு நாள் தொடரை ஆஸ்திரேலிய அணியும், டி20 தொடரை இந்திய அணியும் கைப்பற்றி உள்ளது. இந்த தொடரில் இந்திய அணி சார்பாக அதிக அளவில் பேசப்பட்ட ஒருவர் நடராஜன். ஏனெனில் ஐபிஎல் தொடரில் தனது சிறப்பான பவுலிங்கின் மூலம் இந்திய அணியில் இடம் பெற்ற இவர் தற்போது டி20 மற்றும் ஒருநாள் தொடர் ஆகியவற்றில் இடம் பிடித்து தனது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்திய அணியில் நுழைந்து தற்போது இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரராக மாறியிருக்கும் நடராஜனுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

nattu 1

- Advertisement -

டி20 தொடரில் இடம் பெற்று இருந்த தமிழக வீரரான வருண் சக்கரவர்த்திக்கு பதிலாக அணியில் வாய்ப்பு கிடைத்த நடராஜன் சிறப்பாக செயல்பட்டு டி20 தொடரின் வெற்றிக்கு முக்கிய காரணமாக மாறினார். நடராஜனுக்கு இரண்டு போட்டிகளில் ஆட்ட நாயகன் விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்து இருந்தாலும் கடைசியில் ஆட்ட நாயகன் விருது நழுவிப் போனது இதிலும் குறிப்பாக இரண்டாவது டி20 போட்டி முடிந்தவுடன் ஆட்டநாயகன் விருதை பெற்ற ஹர்டிக் பண்டியா தனக்கு கிடைத்த இந்த விருதுக்கு நடராஜன் தகுதியானவர் என வாய்விட்டு பாராட்டியிருந்தார்.

அதுமட்டுமின்றி மூன்றாவது டி20 போட்டி முடிந்து அவருக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது அப்போதும் தான் பெற்ற அந்த கோப்பையை நடராஜன் கையில் கொடுத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டது நாம் அறிந்ததே. தொடர் நாயகன் கோப்பையை அவர் கையில் கொடுத்து அழகு பார்த்த பாண்டியா அதுமட்டுமின்றி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் நடராஜன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இந்த தொடரில் தொடர் நாயகன் நானாக இருந்தாலும் இந்த விருதுக்கு தகுதியானவர் நீங்கள்தான் என்று நடராஜனை பாராட்டியிருந்தார்.

Nattu

முதல் தொடரிலேயே ஆஸ்திரேலியா போன்ற சவாலான மைதானங்களில் சிறப்பாக செயல்பட்டுள்ளீர்கள் என்று மனதார பாராட்டி இருந்தார். இப்படி ஹர்திக் பாண்டியா நடராஜன் மீது ஏன் இவ்வளவு அக்கறை காட்டுகிறார் என்பதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி நடராஜன் பணிவும், எளிமையும் ஹர்டிக் பண்டியாவை மிகவும் கவர்ந்துள்ளது. ஏற்கனவே இது குறித்து ஹர்திக் பாண்டியா வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

INDvsAUS

அதாவது நடராஜனிடம் இருக்கும் எளிமை மற்றும் இயல்பான சுபாவம் போன்ற குணம் எனக்கு பிடித்திருக்கிறது என்று தெரிவித்திருந்தார். அதுமட்டுமின்றி பாண்டியா போலவே நடராஜனும் ஏழ்மையான பின்னணியில் இருந்து முழுமையான திறமையின் மூலம் மட்டுமே அணிக்குள் வந்துள்ளதால் நடராஜனை பாண்டியாவிற்கு நடராஜனை மிகவும் பிடித்துவிட்டது. தற்போது இருவரும் மிக நெருங்கிய நண்பர்கள் போல பழகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement