மீண்டும் 20 சிக்ஸர்களை பறக்கவிட்ட பாண்டியா. அடேங்கப்பா 55 பந்துகளில் இத்தனை ரன்களா ? -வாயை பிளந்த ரசிகர்கள்

Pandya
- Advertisement -

இந்திய அணியில் முன்னணி இளம் ஆல்ரவுண்டர் ஆன ஹார்டிக் பாண்டியா முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் லண்டன் சென்று அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அதற்கடுத்து இந்திய தேசிய கிரிக்கெட் அகடமியில் பயிற்சி மற்றும் சிகிச்சையினை மேற்கொண்டு வந்தார் பாண்டியா.

Pandya 2

அந்த காயத்திலிருந்து முழுவதும் மீண்டு வராத அவர் நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்திய ஏ அணியில் இடம் பெறும் வாய்ப்பையும் தவற விட்டார். அதனைத் தொடர்ந்து தற்போது முழு உடற் தகுதியுடன் இருக்கும் அவர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவதாக உள்ளூர் போட்டிகளில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.

- Advertisement -

அதன்படி தற்போது டி ஒய் பட்டீல் என்னும் உள்ளூர் டி20 தொடருக்காக ரிலையன்ஸ் 1 அணி சார்பாக களம் இறங்கி விளையாடி வருகிறார். இந்த தொடரின் அனைத்துப் போட்டிகளிலும் இதுவரை அதிரடியாக விளையாடி வரும் பாண்டியா கடந்த போட்டியின் போது 37 பந்துகளில் சதம் விளாசி அசத்தியிருந்தார்.

Pandya 1

அதனைத்தொடர்ந்து தற்போது நடைபெற்ற பி பி சி எல் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். அதன்படி சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அணியை எதிர்த்து விளையாடிய ஹர்டிக் பாண்டியா 55 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 158 ரன்களை குவித்தார். இதில் 20 சிக்சர் மற்றும் 6 பவுண்டரிகளை ஹர்திக் பாண்டியா அடித்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

39 பந்துகளில் சதமடித்த அவர் 55 பந்துகளில் 158 ரன்களை அடித்து குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் ஏற்கனவே சதமடித்த போட்டியிலும் பந்து வீச்சிலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி மீண்டும் அணிக்கு ஆல்-ரவுண்டராக சிறப்பாக தயாராகி உள்ளதாக நிரூபித்தார். இந்நிலையில் இந்த போட்டியிலும் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளதால் நிச்சயம் மீண்டும் இந்தியாவிற்கு திரும்புவதற்கான அனைத்து அறிகுறிகளையும் காண்பித்துள்ளார்.

Pandya

மேலும் தென்ஆப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடர் வரும் 12ஆம் தேதி முதல் துவங்க உள்ளது இந்த தொடருக்கான அணியில் நிச்சயம் ஆர்டிக் பாண்டியா இடம்பெறுவார் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும் தற்போது ஐபிஎல் போட்டிகளிலும் அதே பாண்டியா அதே பார்ம்மை தொடர்வார் என்பதால் மும்பை அணி ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement