ஜேக் காலிஸ் மாதிரி 12 வீரர்களின் பலத்தை சேர்க்கிறார் – ஹர்டிக் பாண்டியாவை வெளிப்படையாக பாராட்டும் பிரபல தெ.ஆ கோச்

Hardik Pandya Bowling
- Advertisement -

பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் கடுமையாக போராடிய இந்தியா கடைசி ஓவரில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இந்த தொடரை வெற்றியுடன் துவக்கியுள்ளது. துபாயில் விறுவிறுப்பாக நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் தரமாக செயல்பட்ட இந்திய பந்துவீச்சாளர்களை சரமாரியாக அடிக்க முடியாமல் 19.5 ஓவரில் 147 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. அதிகபட்சமாக முஹம்மது ரிஸ்வான் 43 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக புவனேஸ்வர் குமார் 4 விக்கெட்டுகளும் ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

IND vs PAK Hardik Pandya Dinesh Kathik Rizwan

- Advertisement -

அதை துரத்திய இந்தியாவுக்கு கேஎல் ராகுல் முதல் ஓவரிலேயே டக் அவுட்டாகி பெரிய பின்னடைவை ஏற்படுத்தியதால் ஏற்பட்ட சரிவை 49 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரி செய்த கேப்டன் ரோகித் சர்மா 12 ரன்களிலும் விராட் கோலி 35 ரன்களிலும் அவுட்டானார்கள். அந்த சமயத்தில் வந்த சூரியகுமார் யாதவும் 18 ரன்களில் அவுட்டானதால் 89/4 என தடுமாறிய இந்தியாவுக்கு 5வது விக்கெட்டுக்கு 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை உறுதிசெய்த ரவீந்திர ஜடேஜா கடைசி ஓவரில் 35 ரன்களில் அவுட்டானார். இருப்பினும் அவருடன் பேட்டிங் செய்த ஹர்திக் பாண்டியா கடைசி வரை அவுட்டாகாமல் அதிரடியாக 33* (17) ரன்களை விளாசி சிக்ஸருடன் பினிஷிங் செய்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார்.

பலே பாண்டியா:
அதனால் கடந்த வருடம் இதே மைதானத்தில் உலக கோப்பையில் முதல் முறையாக தலைகுனியும் தோல்வியை பரிசளித்த பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. கடந்த முறை ஒரு ஓவர் கூட பந்து வீசாமல் பேட்டிங்கிலும் சுமாராக செயல்பட்டு வரலாற்று தோல்வியை சந்திக்க முக்கிய காரணமாக இருந்த அதே பாண்டியா இம்முறை 3 விக்கெட்டுகளையும் 33* ரன்களை எடுத்து வெற்றி பெற வைத்து ஆட்ட நாயகன் விருதை வென்றார். குறிப்பாக பேட்டிங்கில் கோட்டை விட்டாலும் பந்துவீச்சில் போராடிய பாகிஸ்தான் இந்தியாவுக்கு தொடர்ந்து சவால் கொடுத்துக் கொண்டே வந்தது.

Hardik Padnday IND vs PAk

அதனால் ஏற்பட்டு அதிகப்படியான அழுத்தத்தை 19வது ஓவரில் 3 பவுண்டரிகளை பறக்கவிட்ட பாண்டிய தான் குறைத்து இரு அணிகளுக்கு இடையேயான வெற்றியை தீர்மானிப்பவராக திகழ்ந்தார். கடந்த உலக கோப்பையில் சொதப்பினார் என்பதற்காக அதிரடியாக நீக்கப்பட்ட அவர் மனம் தளராமல் ஐபிஎல் 2022 தொடரில் 487 ரன்கள் 8 விக்கெட்டுகளை எடுத்து சிறந்த ஆல்-ரவுண்டராகவும் முன் அனுபவமில்லாத கேப்டன்ஷிப் பதவியில் அனைவரையும் வழிநடத்தி முதல் வருடத்திலேயே கோப்பையை வென்று தன் மீதான விமர்சனங்களை துடைத்தார்.

- Advertisement -

12 வீரர்களுக்கு:
அதனால் இந்திய அணிக்குள் மீண்டும் கம்பேக் கொடுத்து தென்னாப்பிரிக்கா, அயர்லாந்து, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய சமீபத்திய டி20 தொடரில் இந்தியா வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய அவர் இந்தியாவின் விலை மதிப்புமிக்க வீரராக ஜொலித்து வருகிறார். இந்நிலையில் ஒரு எக்ஸ்ட்ரா வீரர் இந்திய அணியில் இருப்பதைப் போன்ற பலத்தை பாண்டியா சேர்ப்பதாக பாகிஸ்தானின் முன்னாள் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் கூறியுள்ளார்.   தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த இவர் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இலங்கை போன்ற அணிகளின் பயிற்சியாளராக செயல்பட்டு ரசிகர்களிடம் புகழ் பெற்றுள்ள நிலையில் தென்னாபிரிக்க ஜாம்பவான் ஜாக் காலிஸ் போல் மிகச் சிறந்த ஆல்-ரவுண்டராக பாண்டியா செயல்படுவதாகவும் பாராட்டியுள்ளார்.

Mickey

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “அவர் அற்புதமான வீரர். அவரால் இந்தியா 12 வீரருடன் விளையாடுவதை போன்ற என்னத்தைக் கொடுக்கிறது. அவரை பார்க்கும்போது எனது தலைமையில் தென்னாப்பிரிக்காவில் இருந்த ஜாக் காலிஸை பார்ப்பது போல் உள்ளது. அவரால் டாப் 5 இடத்தில் பேட்டிங் செய்யும் ஒருவர் 4வது வேகப்பந்து வீச்சாளராக உங்களுக்கு கிடைத்துள்ளார். இது ஒரு எக்ஸ்ட்ரா வீரரை வைத்து விளையாடுவது போன்ற பலத்தைக் கொடுக்கிறது. மேலும் தற்போது பாண்டியா நல்ல முதிர்ச்சியும் முன்னேற்றமும் அடைந்துள்ளதை பார்க்கிறேன்”

“கடந்த ஐபிஎல் தொடரில் தன்னுடைய அணியை சிறப்பாக வழிநடத்திய அவரின் தலைமைப் பண்பும் அபாரமாக இருந்தது. அழுத்தமான சூழ்நிலையில் அவர் தனது அணிக்கு சிறப்பாக விளையாடியுள்ளார். அவர் மிகச்சிறந்த கிரிக்கெட்டராக வளர்க்கிறார் என்று நினைக்கிறேன்” என கூறினார். அவர் கூறுவது போல ஜாம்பவான் ஜாக் காலிஸ் போல இந்திய வெள்ளை பந்து கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்டியா மிகச்சிறந்த ஆல்-ரவுண்டராக நிறைய வெற்றிகளை பெற்றுக்கொடுத்து வருகிறார்.

Hardik Pandya

3 வகையான கிரிக்கெட்டிலும் ஒரு போட்டியில் 50+ ரன்கள் 3 விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்திய வீரர், டி20 கிரிக்கெட்டில் அதிகமுறை ஒரு போட்டியில் 30+ ரன்கள் மற்றும் 3 விக்கெட்டுகளை எடுத்த இந்திய வீரர், டி20 கிரிக்கெட்டில் 500+ ரன்கள் மற்றும் 50+ விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர் போன்ற அவரது சாதனைகளே அதற்குச் சான்றாகும்.

Advertisement