தோனிக்கு ஹேர் கட் பண்ணும் பாண்டியா..! பிறந்த நாள் பரிசு..! – புகைப்படம் உள்ளே

pandiya
Advertisement

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மஹேந்திர சிங் தோனி, இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ஆடி வருகிறார். நேற்று (ஜூலை 7) தோனியின் பிறந்தநாளுக்காக இந்திய வீரர்களின் வாழ்த்துகளை வீடியோவாக பி.சி.சி.ஐ வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் இந்திய வீரர்களோடு தோனியின் மகள் ஸிவாவும் அவரது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர்.
pandiya
இதேபோல தினேஷ்கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா, தவான், ரோஹித் ஷர்மா, குல்தீப், சாஹல், ரெய்னா ஆகியோரும் தங்கள் வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டனர். அந்த வீடியோவின் இறுதியில் தோனியின் மகள் ஸிவா “லவ் யூ அப்பா, உங்களுக்கு வயதாகிவிட்டது” என்று கிண்டலாகக் கூறினார். ஆனால், இந்திய கிரிக்கெட் அணியின் ஹர்திக் பண்டியா தோனிக்கு அளித்த பிறந்தநாள் பரிசு சற்றே வித்யாசமானது.

பாண்டியாவின் ஹேர் ஸ்டைளுக்கென்றே பல ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் போது கூட இவரது ஹேர் ஸ்டைல் பெரிதாக பேசப்ப்ட்டது. அதே போல இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியும் ஹேர் ஸ்டைல் குறித்த விடயங்களில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இந்நிலையில் தோனியின் பிறந்தநாளை ஒட்டி ஹரித்திக் பாண்டியா தோனிற்கு ஹேர் கட் செய்துள்ளார்.


சமீபத்தில் தோனிக்கு ஹர்திக் பாண்டியா ஹேர் கட் செய்யும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஹர்திக் பாண்டியா. மேலும், அந்த பதிவில்’ இந்த சாகசம் நிபுணர்களால் செய்யப்பட்டவை, இதை வீட்டில் யாரும் முயற்சிக்க வேண்டாம்’என்று வேடிக்கையாக பதிவிட்டுள்ளார் ஹர்திக் பாண்டியா.

Advertisement