கேமராமேனை காயமாக்கிய சிக்ஸ்.. நெகிழ்ச்சியான செயலை செய்த பாண்டியா.. கடவுள் துணை பற்றி பேட்டி

Hardik Pandya
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அகமதாபாத்தில் நடைபெற்ற 5வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 30 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. நேற்று நடைபெற்ற அப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 232 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக ஹர்டிக் பாண்டியா 63, திலக் வர்மா 73 ரன்கள் எடுத்தார்கள். அடுத்து விளையாடிய தென்னாப்பிரிக்கா கடுமையாக போராடியும் 20 ஓவரில் 201/8 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

அதிகபட்சமாக குவிண்டன் டீ காக் 65 ரன்கள் எடுத்த நிலையில் பந்து வீச்சில் அசத்திய இந்தியாவுக்கு அதிகபட்சமாக வருண் சக்கரவர்த்தி 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அதனால் 5 போட்டிகள் கொண்ட இத்தொடரை 3 – 1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. அதற்கு 63 ரன்கள் மற்றும் 1 விக்கெட் எடுத்து முக்கிய பங்காற்றிய ஹர்திக் பாண்டியா ஆட்டநாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

கேமராமேனுக்கு காயம்:

முன்னதாக இப்போட்டியில் பட்டைய கிளப்பும் ஆட்டத்தை வெளிப்படுத்திய பாண்டியா 16 பந்துகளில் 50 ரன்கள் அடித்தார். அதன் வாயிலாக யுவ்ராஜ் சிங்கிற்கு பின் இந்தியாவுக்காக 2வது வேகமான அரை சதமடித்த வீரராக சாதனை படைத்தார். அத்துடன் 5 பவுண்டரி 5 சிக்சர்களை பறக்க விட்ட பாண்டியா ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தினார்.

துரதிஷ்டவசமாக அவர் அடித்த 5 சிக்சர்களில் ஒன்று போட்டியை நேரலையில் படம் பிடித்துக் கொண்டிருந்த கேமராமேனின் கையில் பட்டு காயப்படுத்தியது. சொல்லப்போனால் கேமராமேனில் காதை நோக்கி சென்ற பந்து கடைசி நேரத்தில் கையில் பட்டதால் பெரியளவு காயம் தவிர்க்கப்பட்டது. அதனால் பதற்றமடைந்த பாண்டியா போட்டி முடிந்ததும் கேமராமேனை சந்தித்து இந்திய வீரர்கள் பயன்படுத்தும் ஐஸ்பேக்கை அவருடைய கையில் வைத்து ஒத்திரம் கொடுத்து நலம் விசாரித்தார்.

- Advertisement -

கடவுள் துணை:

அவருடைய செயலைப் பார்த்து நெகிழ்ச்சியடைந்த கேமராமேன். “எனக்கு பெரிதாக எதுவும் நடக்கவில்லை” என்று பாண்டியாவுக்கு நன்றி சொன்னார். இறுதியில் அது பற்றி பாண்டியா பேசியது பின்வருமாறு. “கடவுள் என்னுடன் துணையாக இருக்கிறார். அதனால் தான் பந்து அதற்கு மேலே செல்லவில்லை. நாளை குணமடைந்து விடக்கூடிய அளவுக்கு மட்டுமே பந்து அவரை காயப்படுத்தியுள்ளது”

இதையும் படிங்க: 9க்கு 9 வெற்றி.. ஆஸியின் சாதனையை உடைத்த இந்தியா.. சொந்த மண்ணில் கில்லியாக புதிய உலக சாதனை

“அதே சமயம் கேமராமேன் மிகவும் அதிர்ஷ்டமானவர். பந்து கொஞ்சம் மேலே சென்று அவரை அதிகம் காயப்படுத்தாமல் இருந்ததற்கு நான் நன்றியுடையவனாக இருக்கிறேன். அந்தப் பந்தை நான் தெளிவாக அடித்திருந்ததால் அவருக்கு என்ன ஆகியிருக்குமோ? என்று எனக்குள் கவலைப்பட்டேன். அதனால் அவரிடம் மன்னிப்பு கேட்டு அவரைப் பார்க்க விரும்பினேன். என்னுடைய 10 – 11 வருட கேரியரில் அவர் நிறைய போட்டிகளில் பார்க்கிறேன். எனவே அவர் நன்றாக இருக்கிறார் என்பதை உறுதி செய்துகொள்ள விரும்பினேன்” என்று கூறினார்.

Advertisement