பாண்டியா தற்போது நிச்சயதார்த்தம் செய்த நட்டாஷா யார் தெரியுமா ? அவரின் முன்னாள் காதலர் இவர்தானாம் – வெளியான புகைப்படம்

Natasa

இந்திய அணியின் முன்னணி இளம் ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியாவின் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக லண்டன் சென்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன் பிறகு தற்போது இந்தியா திரும்பியுள்ள பாண்டியா மீண்டும் கிரிக்கெட் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். வரும் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்திய ஏ அணிக்காக விளையாடவும் தயாராகி வருகிறார்.

Natasa 1

இந்நிலையில் நேற்று புத்தாண்டை முன்னிட்டு தனது காதலியான நட்டாஷா ஸ்டேன்கோவிக் என்பவரை துபாயில் வைத்து நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். மேலும் அவர்களின் நிச்சயதார்த்தத்தை மோதிரத்துடன் கூடிய புகைப்படமும் நேற்று இணையத்தில் வெளியாகி வருகிறது. மேலும் பாண்டியாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர்களது புகைப்படத்தை பகிர்ந்து அவர்களது உறவினை உறுதி செய்தார்.

இந்நிலையில் தற்போது அவர் கரம் பிடிக்க இருக்கும் நட்டாஷா ஸ்டேன்கோவிக் யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி செர்பிய நாட்டு மாடலான நட்டாஷா ஸ்டேன்கோவிக் தற்போது மும்பையில் வசித்து வருகிறார். மேலும் சில ஹிந்தி படங்களில் தோன்றியுள்ளார். அதுதவிர பாடல் காட்சிகளில் நிறைய இடம் பெற்றிருக்கிறார். மேலும் சல்மான் கான் தொகுத்து வழங்கிய ஹிந்தி பிக் பாஸ் 8 ஆவது சீசனில் அவர் கலந்துகொண்டு ஒரு மாதம் வரை பிக்பாஸ் வீட்டில் இருந்துள்ளார்.

aly

அதனைத் தொடர்ந்து தற்போது 2019ஆம் ஆண்டு வரை ஆலி கோனி என்பவருடன் காதலில் இருந்துள்ளார். அவர்கள் இருவரும் ஒன்றாக டான்ஸ் ரியாலிட்டி ஷோ ஒன்றில் ஒன்று கலந்து கொண்டு மூன்றாவது இடத்தை பிடித்தனர். மேலும் அவர்கள் காதலித்த காலத்தில் ஒன்றாக சுற்றித் திரிந்தது மட்டுமின்றி டேட்டிங் என அனைத்தையும் மேற்கொண்டிருந்தனர். இவர்கள் இருவரின் புகைப்படமும் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

- Advertisement -

aly 1

மேலும் ஆலி கோனி என்பவர் மும்பை மாடல் மற்றும் டிவி நடிகர் ஆவார். அவரின் காதலியை தான் தற்போது பாண்டியா நிச்சயதார்த்தம் செய்து உள்ளார். மேலும் பாண்டியாவின் நிச்சயதார்த்த புகைப்படத்தை பார்த்து அதற்கு ஆலி கோனி ஹார்ட் எமோஜிக்களை பதிவிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.