ஹார்டிக் பாண்டியா நிச்சயதார்த்தம் பண்ணிட்டாரா ?அவரது தந்தை என்ன சொல்லியிருக்கார் பாருங்க – விவரம் இதோ

Pandya
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி இளம் ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியாவின் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக லண்டன் சென்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன் பிறகு தற்போது இந்தியா திரும்பியுள்ள பாண்டியா மீண்டும் கிரிக்கெட் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். வரும் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்திய ஏ அணிக்காக விளையாடவும் தயாராகி வருகிறார்.

Natasa

- Advertisement -

இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு தனது காதலியான நட்டாஷா ஸ்டேன்கோவிக் என்பவரை துபாயில் வைத்து நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். மேலும் அவர்களின் நிச்சயதார்த்தத்தை மோதிரத்துடன் கூடிய புகைப்படமும் இணையத்தில் வெளியாகி வைரலாகியது. மேலும் பாண்டியாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர்களது புகைப்படத்தை பகிர்ந்து அவர்களது உறவினை உறுதி செய்தார்.

இந்நிலையில் பாண்டியாவின் இந்த நிச்சயதார்த்தம் குறித்து அவரின் தந்தை ஹிமன்ஷூ தற்போது அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது : பாண்டியா நிச்சயதார்த்தம் செய்தது எங்களுக்கே தெரியாது அவரின் இன்ஸ்டாகிராம் பதிவு வைரல் ஆன பிறகு எங்களுக்கு தெரியவந்தது. மேலும் இந்த முடிவை அவர் யோசித்துதான் எடுத்து இருப்பார் என்றும் அவர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Natasa 1

இந்திய அணியின் முக்கிய வீரராக வளர்ந்துவரும் ஹார்டிக் பாண்டியா ஏற்கனவே 5 பாலிவுட் நடிகைகளுடன் சேர்த்து கிசுகிசுக்க பட்டார். அடிக்கடி டேட்டிங், பார்ட்டி என்று சுற்றித்திரிந்த பாண்டியா இந்த நிச்சயதார்த்த புகலிடம் மூலம் தனது உறவினை உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement