ஹார்டிக் பாண்டியா கட்டியிருக்கும் இந்த வாட்சின் விலை என்ன தெரியுமா ? – தெரிஞ்சா உங்களுக்கு மயக்கமே வரும்

Pandya
- Advertisement -

இந்திய அணியின் இளம் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா ஐபிஎல் போட்டிகளில் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் இந்திய அணியில் இடம் பிடித்தார். ஆரம்ப கால வாழ்க்கையில் மிகச்சாதாரணமா மிடில் கிளாஸ் வாழ்க்கையிலே இருந்த பாண்டியா ஐபிஎல் பின்னர் ஆளே மாறிவிட்டார் என்று கூறலாம்.

pandya 2

- Advertisement -

ஏனெனில் அதன் பிறகு அவர் தற்போது வாழ்ந்து வரும் ஆடம்பர வாழ்க்கை உச்சத்திற்கு சென்று உள்ளது என்றே கூறலாம். அவரது உடைகள், வீடு, ஷூ, கார் மற்றும் வாட்ச் என அனைத்தும் மிக விலை உயர்ந்த பொருளாக உள்ளன. உடல் முழுவதும் டாட்டூ, பங்கியான உடைகள் மற்றும் விதவிதமான ஹேர் ஸ்டைல் என தன்னை ரசிகர்களின் கவனத்தில் தொடர்ச்சியாக வைத்திருக்கிறார் பாண்டியா.

இந்நிலையில் புத்தாண்டு அன்று நடாஷா என்பவரை நிச்சயதார்த்தம் செய்துக்கொண்டார். இந்நிலையில் அவர் கட்டியிருக்கும் வாட்ச் வாட்ச் குறித்து ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி லண்டன் மருத்துவமனையில் அறுவைசிகிச்சையின் போது அவர் கட்டியிருந்த வாட்ச் விலை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

pandya1

சுவிட்சர்லாந்து நாட்டின் கடிகார வடிவமைப்பு நிறுவனமான “பேடாக் பிலிப்” என்ற நிறுவனம் தயாரிக்கும் இந்த வாட்ச் 8 வருட காத்திருப்புக்கு பிறகு கிடைக்கும். பாண்டியாவின் வாட்ச் விலை இந்திய மதிப்பில் சுமார் 81 லட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ரக வாடச்கள் 80 லட்சத்தில் இருந்து 13 கோடி வரைக்கும் இருப்பதாக கூறப்படுகிறது. பாண்டியாவின் இந்த வாட்சை கண்ட ரசிகர்கள் இத்தனை இலட்சத்தில் ஒரு வாட்ச்சா ? என்று வாய் பிளந்து வருகின்றனர்.

Advertisement