புத்தாண்டு அன்று நிச்சயதார்த்தம். காதலியை கரம்பிடிக்க இருக்கும் பாண்டியா – புகைப்படம் இதோ

Pandya

இந்திய அணியின் இளம் ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியா தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் இந்திய அணியில் முக்கிய வீரராக திகழ்கிறார். கடந்த செப்டம்பர் மாதம் தனது முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக லண்டன் சென்று ஆப்ரேஷன் செய்து இந்தியா திரும்பினார். அதன்பின்னர் தற்போதுதான் உடற்தகுதி பெற்று பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்.

View this post on Instagram

Starting the year with my firework ❣️

A post shared by Hardik Pandya (@hardikpandya93) on

அடுத்த மாதம் நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான அதிகாரபூர்வமற்ற தொடரில் இந்திய ஏ அணியில் ஹார்டிக் பாண்டியா இடம்பிடித்துள்ளார். இந்நிலையில் புத்தாண்டான இன்று தனது காதலியான நட்டாஷா ஸ்டான்கோவிக் என்கிற ஹிந்தி நடிகை நிச்சயதார்த்தம் செய்துள்ளார். செர்பிய நாட்டைச் சேர்ந்த நடாஷா மும்பையில் மாடல் மற்றும் நடிகையாக உள்ளார்.

ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நட்டாஷா என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர்களுக்கு இடையேயான காதலை இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட ஹர்டிக் பண்டியா அதே கையோடு நிச்சயதார்த்தத்தை முடித்து நிச்சயதார்த்த மோதிரத்தோடு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இன்ஸ்டாகிராம் மூலம் இந்திய அணியின் வீரர்கள் பலரும் பாண்டிடியாக்கு வாழ்த்துக்களை தெரிவித்தும் வருகின்றனர்.

- Advertisement -