இவர்தான் என் காதலி. புதிதாக ஒரு நடிகையை தன் குடும்பத்திற்கு அறிமுகப்படுத்திய ஹார்டிக் பாண்டியா – விவரம் இதோ

Pandya
- Advertisement -

இந்திய அணியின் இளம் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா கடந்த சில வருடங்களாக இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி வருகிறார். இந்திய அணியின் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் இணைந்து விளையாடி வரும் ஹர்டிக் பாண்டியா உலக கோப்பை தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தார்.

Pandya 1

- Advertisement -

மேலும் உலக கோப்பை தொடருக்கு பின்னர் காயம் காரணமாக தற்போது இந்திய அணியில் இருந்து விலகியுள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் இருந்து விலகிய பாண்டியா காயம் குணமடைய சிகிச்சையை மேற்கொண்டு வருகிறார். கடந்த வாரம் லேக்மீ அழகு நிறுவனம் நடத்திய பேஷன் ஷோவில் கலந்துகொண்டு ராம்ப் வாக் செய்தார்.

அதன் பின்னர் தற்போது அவர் காதல் குறித்த சர்ச்சை தற்போது மீண்டும் எழுந்துள்ளது. அதன்படி அவர் நட்டாஷா ஸ்டேன்கோவிக் என்ற நடிகையுடன் டேட்டிங் செய்து வருவதாகவும், அவரை காதலிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நட்டாஷா ஹிந்தியில் பிரபலமான மியூசிக் வீடியோக்கள் மற்றும் சில படங்களிலும் நடித்துள்ளார். மேலும் சல்மான்கான் நடத்திய ரியாலிட்டி ஷோவில் அவர் தனது முன்னாள் காதலனுடன் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

Natasha

இந்நிலையில் அவரை ஹார்டிக் பாண்டியா காதலித்து வருவதாகவும், அவரது குடும்பத்தினருக்கு அதாவது அவரது தந்தை மற்றும் அண்ணன், அண்ணன் மனைவி ஆகியோருக்கு ஹார்டிக் பாண்டியா நட்டாஷாவை காதலியாக அறிமுகப்படுத்தி வைத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஹார்டிக் பாண்டியா ஏற்கனவே இஷா குப்தா, ஊர்வசி மற்றும் எல்லி ஆகிய பாலிவுட் நடிகைகளுடன் காதலில் இருந்ததாக கிசுகிசுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement