அம்பேத்கரை கிண்டல் செய்து சிக்கலில் சிக்கியுள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் – நீதிமன்றத்தில் வழக்கு பதிவு ?

- Advertisement -

இந்திய கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான ஹர்திக் பாண்டியா டாக்டார்.அம்பேத்கர் அவர்களை சமூகவலைத்தளமான டிவிட்டரில் விமர்சித்து டிவீட் ஒன்றை பதிந்தார். தற்போது அந்த டிவீட் பிரச்சனையாகி நீதிமன்றம் வரையில் சென்றுள்ளது.

pandiya

- Advertisement -

இளம் வீரரான ஹர்திக் பாண்டியா அதிரடி ஆட்டக்காரர். இவர் கடந்த டிசம்பர் மாதத்தில் டிவிட்டரில் இந்திய அரசியலமைப்பை உருவாக்கியதில் பெரும்பங்கு கொண்ட சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரின் இட ஒதுக்கீடு வரைவை விமர்சித்து பதிவிட்டு இருந்தார். பாண்ட்யாவின் இந்த பதிவு அப்போது அம்பேத்கரை பின்பற்றுபவர்களுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியது.

ஹர்திக் பாண்ட்யாவின் இந்த செயலை கண்டித்தும் பாண்டியாவின் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும் என்றும் ஜோத்பூர் நீதிமன்றத்தில் டி.ஆர் மேவால் என்ற நபர் வழக்கு பதிந்தார்.அந்த மனுவில் டி.ஆர்.மேவால் டாக்டர்.அம்பேத்கரின் இடஒடுக்கீடு குறித்த பாண்டியாவின் பதிவு அம்பேத்கரை கொச்சைப்படுத்திடும் நோக்கத்துடன் உள்ளது. மேலும் ஒரு சாராரின் உணர்வுகளை காயப்படுத்தியுள்ளார்.

Dr

எனவே கிரிக்கெட் வீரர் பாண்டியா மீது உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும்” என்றும் குறிப்பிட்டிருந்தார்.இந்த மனு தற்போது விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த ஜோத்பூர் நீதிமன்றம் இந்த மனுவில் குறிப்பிட்டுள்ள தகவல்களுக்கான முகாந்திரம் இருந்தால் “ஹர்திக் பாண்டியா மீது காவல்துறை வழக்கு பதிந்து முறையான நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறியுள்ளது.இதனால் தற்போது அம்பேத்கரை விமர்சித்த ஹர்திக்பாண்டியா சிக்கலில் சிக்கியுள்ளார்.

Advertisement