சயீத் முஷ்டாக் அலி கோப்பை 2024 டி20 கிரிக்கெட் தொடரில் நவம்பர் 23ஆம் தேதி பரோடா மற்றும் குஜராத் அணிகள் மோதிய போட்டி இந்தூரில் நடைபெற்றது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் 20 ஓவரில் அதிரடியாக விளையாடி 184 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக ஆரியா தேசாய் 78 (52), கேப்டன் அக்சர் பட்டேல் 43* (33) ரன்கள் எடுத்தார்கள்.
பரோடா அணிக்கு அதிகபட்சமாக அடிட் சேத் 2 விக்கெட்டுகளை எடுத்தார். பின்னர் 185 ரன்களை துரத்திய பரோடா அணிக்கு துவக்க வீரர்கள் ரத்வா 5, மிடெஷ் படேல் 10 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்கள். அடுத்து வந்த அடிட் சேத் 16 ரன்களில் அவுட்டானார். இருப்பினும் 3வது இடத்தில் களமிறங்கிய சிவாலிக் சர்மா அதிரடியாக விளையாடினார்.
பாண்டியா அதிரடி:
அவருடன் ஜோடி சேர்ந்த ஹர்திக் பாண்டியா தம்முடைய ஸ்டைலில் பேட்டிங் செய்த ரன்கள் குவித்தார். அந்த வகையில் வேகமாக ரன்கள் குவித்த அந்த ஜோடியில் சிவாலிக் சர்மா அரை சதம் அடித்து 64 (43) ரன்கள் குவித்து செவிலியன் திரும்பினார். அடுத்ததாக வந்த கேப்டன் க்ருனால் பாண்டியா 3 ரன்களில் அவுட்டானார்.
ஆனால் மறுபுறம் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஹர்திக் பாண்டியா 6 பவுண்டரி 5 சிக்சருடன் அரை சதமடித்து 74* (35) ரன்களை 211.43 ஸ்ட்ரைக் ரேட்டில் சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார். அவருடைய ஆட்டத்தால் 19.3 ஓவரில் 188-5 ரன்கள் எடுத்த பரோடா 5 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்றது. ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் டி20 ஆல்ரவுண்டராக இருக்கும் பாண்டியா அதை நிரூபிக்கும் வகையில் இப்போட்டியில் அசத்தினார். அதனால் குஜராத்துக்கு அதிகபட்சமாக ரவி பிஸ்னோய் 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.
அபார சாதனை:
முன்னதாக இந்தப் போட்டியில் நம்பிக்கை நட்சத்திரம் ஹர்திக் பாண்டியா 74* ரன்கள் மற்றும் ஒரு விக்கெட் எடுத்து ஆல் ரவுண்டராக பரோடா வெற்றியில் முக்கிய பங்காற்றினார். இந்த 74 ரன்களையும் சேர்த்து டி20 கிரிக்கெட்டில் அவர் 5067 ரன்கள் எடுத்துள்ளார். அத்துடன் பந்து வீச்சில் அவர் 180 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
இதையும் படிங்க: இந்திய வாய்ப்பில் அழுதுட்டேன்.. அந்த பேர் தான் 3 விக்கெட்ஸ் எடுக்க ஹெல்ப் பண்ணாங்க.. ஹர்ஷித் ராணா
இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் 5000 ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை பாண்டியா படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ஹர்திக் பாண்டியா: 5067 ரன்கள் 180 விக்கெட்ஸ்
2. ரவீந்திர ஜடேஜா: 3684 ரன்கள் 225 விக்கெட்ஸ்
3. அக்சர் படேல்: 2960 ரன்கள் 227 விக்கெட்ஸ்



