நான் வரனும்னா ஒரே வழிதான்.. கண்டிஷன் போட்ட பின்னரே அணி மாற்றம் செய்த ஹார்டிக் பாண்டியா – வெளியான தகவல்

Pandya
- Advertisement -

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கடந்த 2013-ஆம் ஆண்டிலிருந்து 2023-ஆம் ஆண்டு வரை வெற்றிகரமான கேப்டனாக செயல்பட்ட ரோகித் சர்மா ஐந்து முறை ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்று தனது அபாரமான கேப்டன்சி திறமையை வெளிப்படுத்தி இருந்தார். அதோடு மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை வென்ற அனைத்து தொடர்களிலும் ரோஹித் சர்மாவின் செயல்பாடு பலராலும் பாராட்டப்பட்டது. கிட்டத்தட்ட ஐபிஎல் தொடரில் ரோகித் சர்மா பெற்ற வெற்றிகளே அவரை இந்திய அணிக்கு கேப்டனாகவும் மாற்றியது என்றே கூறலாம்.

இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அறிமுகமாகி விளையாடி வந்த ஹார்டிக் பாண்டியா கடந்த 2022-ஆம் ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக மாறியபோது அந்த அணியின் கேப்டனாக செயல்பட்டார். அப்படி தான் பொறுப்பேற்ற முதல் தொடரிலேயே கோப்பையை வென்று கொடுத்த பாண்டியா இந்த ஆண்டு 2023-இல் நடைபெற்ற ஐபிஎல் தொடரிலும் இறுதிப்போட்டி வரை குஜராத் அணியை கொண்டு சென்றார்.

- Advertisement -

இப்படி மும்பை அணியிலிருந்து வெளியேறிய பின்னர் மிகச் சிறப்பான கேப்டன்சி திறமையை வெளிப்படுத்திய ஹார்டிக் பாண்டியாவை மீண்டும் தற்போது ஏலத்திற்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் பேச்சுவார்த்தை நடத்தி ட்ரேடிங் முறையில் தங்களது அணிக்கு கொண்டு வந்தது.

அதோடு மட்டுமின்றி அடுத்த ஐபிஎல் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாகவும் ஹார்டிக் பாண்டியாவை நியமித்தது. இதன் காரணமாக தற்போது ரோகித் சர்மாவின் சாம்ராஜ்ஜியம் மும்பை இந்தியன்ஸ் அணியில் முடிவுக்கு வந்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இப்படி பாண்டியா மும்பை அணிக்கு டிரேடிங் செய்யப்பட வேண்டுமென்றால் ஒரு கண்டிஷன் இருக்கிறது என்று கூறி டிரேடிங்க்கு முன்பே ஒரு கண்டிஷன் போட்ட பின்னர் தான் அணி மாற்றம் செய்துள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக செய்து ஒன்றினை வெளியிட்டுள்ள தனியார் பத்திரிகை ஒன்று குறிப்பிட்டதாவது : குஜராத் அணியின் கேப்டனாக தற்போது செயல்பட்டு வருவதால் நான் மீண்டும் மும்பை அணிக்கு மாறினால் அங்கும் கேப்டன் பதவி கொடுக்குமாறு மும்பை நிர்வாகத்திடம் ஹார்டிக் பாண்டியா நிபந்தனை விதித்துள்ளார்.

இதையும் படிங்க : ரோஹித் சர்மாவை டிரேடிங் முறையில் விலைக்கு வாங்க முயன்ற அணி.. பேச்சு வார்த்தை பெயிலியர் – எந்த அணி தெரியுமா?

அதனை தொடர்ந்து கேப்டன் மாற்றம் குறித்து கடந்த 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் போதே ரோகித் சர்மாவிடம் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் இந்த தகவலை தெரிவித்து விட்டதாம். மேலும் மும்பை நிர்வாகம் சொன்ன காரணத்தையும் ரோகித் சர்மா ஏற்றுக் கொண்டாராம். இதன் காரணமாகவே தற்போது ஹார்டிக் பாண்டியா புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Advertisement