பென் ஸ்டோக்ஸ் கேட்சை பிடித்த ஷிகார் தவானை நோக்கி மண்டியிட்டு நமஸ்காரம் செய்த பாண்டியா – வைரலாகும் வீடியோ

Pandya

இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்டிங் ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் கடந்த பல வருடங்களாகவே அந்த அணியின் பலம் வாய்ந்த வீரராக பார்க்கப்படுகிறார். மூன்று வகையான கிரிக்கெட்டிலும் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கும் வீரராக வலம் வரும் பென் ஸ்டோக்ஸ் இந்திய அணிக்கு எதிரான 2வது போட்டியிலும் 10 சிக்சர்களை பறக்கவிட்டு 99 ரன்கள் அடித்து இந்திய அணிக்கு திகிலூட்டினார்.

stokes

இந்நிலையில் நேற்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஸ்டோக்ஸ் பெரிய இலக்கை சேசிங் செய்வதில் முக்கிய வீரராக திகழ்ந்தார் என்பதை எதிர்பார்த்த இந்திய அணி அவரது விக்கெட்டுக்கு முக்கியத்துவம் அளித்து விளையாடியது. இருப்பினும் இந்த போட்டியின்போது ஸ்டோக்ஸ் அடித்த ஒரு பந்தினை ஹார்டிக் பாண்டியா எளிதாக கேட்ச் பிடிக்க வேண்டிய அந்த வாய்ப்பினை கோட்டைவிட்டார்.

இதனால் ஹார்திக் பாண்டியா அதிர்ச்சி அடைந்தது மட்டுமின்றி அணி வீரர்கள் மற்றும் சப்போர்ட் ஸ்டாப் என அனைவரும் அந்தக் கேட்ச்யை விட்டவுடன் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அடுத்ததாக பென் ஸ்டோக்ஸ் ஆட்டம் இழக்கும் வரை பாண்டியாவின் முகத்தில் அந்த அதிர்ச்சி இருந்து கொண்டே இருந்த நிலையில் நடராஜன் வீசிய 11-வது ஓவரில் புல்டாஸ் பந்தை எதிர்கொண்ட பென் ஸ்டோக்ஸ் லெக் சைடில் தூக்கி அடித்தார்.

nattu

அந்த பந்து நேராக லெக் சைடில் இருந்த தவானின் கைகளுக்கு சென்றது. உடனேயே அந்த பந்தை பிடித்த தவான் வழக்கம்போல் தான் வெளிப்படுத்தும் விக்கெட் கொண்டாட்டத்தின் படி தொடையை தட்டி இந்த விக்கெட்டை கொண்டாடினார். ஸ்டோக்ஸ் அப்போது 39 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனை கண்ட ஹார்திக் பாண்டியா தான் விட்ட இடத்திலிருந்து இவர் பெரிய ரன் குவிப்பை அளிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் உடனடியாக ஆட்டமிழந்து வெளியேறியதால் சந்தோஷத்தில் தவானை நோக்கி மண்டியிட்டு நமஸ்காரம் செய்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

அவரின் இந்த செயல் தற்போது இணையத்தில் வீடியோவாக வைரலாகி வருகிறது. 329 ரன்கள் குவித்த இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸ் இன் போது இங்கிலாந்து அணியை 322 ரன்களுக்கு சுருட்டி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மட்டுமின்றி தொடரையும் 2 க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. இந்த போட்டியில் ஹாட்ரிக் பாண்டியா முக்கியமான நேரத்தில் 44 பந்துகளில் 64 ரன்கள் குவித்து இந்திய அணியின் ரன் குவிப்புக்கு உதவினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.