இனிமே பேட்டிங் மட்டுமல்ல நான் இதற்கும் தாயார். பயிற்சியை முடித்த – ஹார்டிக் பாண்டியா வெறித்தனம்

Pandya

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஹர்டிக் பாண்டியா கடந்த 2019ஆம் ஆண்டு முதுகுப்பகுதியில் செய்து கொண்ட ஆபரேஷனுக்கு பிறகு பந்துவீசாமல் இருந்து வருகிறார். மேலும் லண்டனில் அறுவை சிகிச்சை செய்த பிறகு இந்திய அணியில் கலந்து கொள்ளாமல் இருந்த பாண்டியா டி. ஒய். பாட்டில் தொடரில் விளையாடி தனது உடற்தகுதி உறுதி செய்தார். அதன் பிறகு கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் விளையாடிய பாண்டியா முழுநேர பேட்ஸ்மேனாக மட்டுமே விளையாடினார்.

Pandya-4

அந்த தொடர் முழுவதும் அவர் பந்து வீசாமலே இருந்தார். அதன் பிறகு இந்திய அணியில் இடம் பிடித்து ஒரு முழுநேர பேட்ஸ்மேன் ஆகவே பாண்டியா விளையாடி வருகிறார். இருப்பினும் ஆஸ்திரேலிய சென்ற சுற்றுப் பயணத்தில் அவர் ஒரு சில ஓவர்கள் பந்து வீசினார். மேலும் அந்த தொடரின் இறுதியில் ஹார்டிக் பாண்டியா பந்துவீசுவது குறித்து பேட்டியளித்த இந்திய அணியின் கேப்டன் கோலி கூறுகையில் :

பாண்டியா தற்போது பந்துவீச தயாராகி வருவதாகவும் நேரம் வரும்போது அவர் பந்து வீசுவார் என்றும் விராட் கோலியும் கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான தற்போதைய டி20 தொடரில் இடம் பெற்றிருக்கும் பாண்டியா பேட்டிங்கில் பினிஷர் ரோல் மட்டுமின்றி பந்துவீசவும் தயாராகிவிட்டார்.

மேலும் தற்போதைய இங்கிலாந்து அணிக்கெதிரான தொடருக்காக பேட்டிங் பயிற்சி மட்டுமில்லாது பந்துவீச்சு பயிற்சியையும் மேற்கொண்ட பாண்டியா அதனை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் பந்துவீசுவதற்கான எனது அனைத்து பயிற்சிகளும் முடிந்துவிட்டன. முதல் போட்டியில் விளையாட ஆவலாக காத்திருக்கிறேன் என்றும் ஹார்டிக் பாண்டியா தனது பதிவினை வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

pandya

இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கெதிரான இந்த தொடரில் மீண்டும் அவர் பந்து வீச உள்ளது உறுதியாகியுள்ளது. ஏற்கனவே நடைபெற்ற டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி இந்த t20 தொடரையும் கைப்பற்றுவதில் மும்முரம் காட்டும் என்று தெரிகிறது.