கபில் தேவின் கருத்தின் காரணமாக இன்று ஹார்டிக் பாண்டியா முடிவு – எல்லாம் நல்லதுக்கு தான்

Kapil
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி இன்று கொழும்பு பிரம்மதேசா மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் ஷிகார் தவான் தலைமையிலான இந்திய அணியும், தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்து விளையாடிய ஸ்ரீலங்கா அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 262 ரன்களை குவித்தது.

kuldeep

- Advertisement -

அதிகபட்சமாக அந்த அணியின் வீரரான கருணரத்னே 43 ரன்களையும், கேப்டனான ஷனகா 39 ரன்களையும் குவித்தனர். அதன் பின்னர் தற்போது 263 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகின்றது. இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் இடம் பெற்று விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அணியின் சீனியர் வீரரான சஞ்சு சாம்சனுக்கு இடம் கிடைக்காமல் இளம் வீரரான இஷான் கிஷன் பங்குபெற்று விளையாடி வருகிறார்.

மேலும் இந்த போட்டியில் ஏற்கனவே நாம் கடந்த சில மாதங்களாகவே பேசி வரும் ஹார்டிக் பாண்டியா பந்து வீசுவாரா ? என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி கிடைத்துள்ளது. அதன்படி இன்றைய போட்டியில் பந்து வீசி அவர் 5 ஓவர்களில் 33 ரன்களை விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

pandya

ஏற்கனவே இந்திய அணியின் வீரரான கபில்தேவ் கூறுகையில் ஹார்டிக் பாண்டியா கடந்த சில தொடர்களை பந்து வீசாமல் இருந்து வருவது இந்திய அணிக்கு பலவீனம் என்றும் அவர் பந்து வீச வேண்டும் என்றும் தனது கருத்தை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது இந்த போட்டியில் ஹார்டிக் பாண்டியா மீண்டும் பந்துவீசி தனது திறமையை நிரூபித்துள்ளார். இதன் காரணமாக மீண்டும் அவர் தொடர்ச்சியாக பந்து வீசுவார் என்று தெரிகிறது. கபில் தேவின் கருத்திற்காக இந்த செயலை ஹார்டிக் பண்டியா செய்து இருந்தாலும் இதுவும் இந்திய அணிக்கு நல்லதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement